சந்தைப்படுத்தலில் நிறங்கள் மூலம் மக்கள் மனதில் தாக்கம் செலுத்துவது எப்படி?

ஒவ்வொரு நிறமும் அதற்கே உரித்தான தனித்துவமான இயல்பினைக் கொண்டுள்ளன. பார்வையே பல வேளைகளில் ஒரு பொருளின்நம்பகத்தன்மையை தீர்மானிக்கிறது. பல வேளைகளில் நிறங்களே பொருளொன்றை தெரிவு செய்வதில் அடிப்படையாக இருக்கிறது. ஆய்வுகளின்படி ஒவ்வொரு நிறத்திற்கும் அதற்கே உரித்தான தனித்துவமான இயல்பு வாடிக்கையாளர்களை கவர்வதுடன், மூளையில் ஆர்வத்தை தூண்டவோ அல்லது மன அமைதியை ஏற்படுத்த வல்லதாகவோ இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் இலகுவாக மக்கள் மனதை கவரும் வகையில் பொருட்களையோ சேவைகளையோ முன்னெடுக்கின்றன.


market

சில நிறங்களும் அதன் பண்புகளும்…   

  • சிவப்பு : பசியார்வத்தை தூண்டும் நிறமாக சிவப்பு கருதப்படுகிறது, கூடுதலாக துரித உணவு (Fast food) நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றது. அவசரமான சூழலைக் குறிப்பதாயும் இருப்பதனால் அனுமதி வழங்குதல் தொடர்பான சமிக்ஞைகளை வழங்கப் பயன்படுகிறது. சிவப்பு நிறத்தின் மூலம் இலக்கில் உறுதியாயிருப்பதற்கான சக்தி வெளிபடுத்தப்படுகிறது. உடல் ரீதியாக இதயத் துடிப்பைத் தூண்டும் இயல்பு சிவப்பு நிறத்திற்கு உண்டு.
  • நீலம் : மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் நிறமாக நீலம் காணப்படுகின்றது. இது சமாதானம், நீர் மற்றும் நம்பகத்தன்மையைக் குறிப்பதாய் இருக்கிறது. நீலம் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் வியாபார குறியீடுகளில் (Bussiness Logo) வெளிப்படுத்த உதவுகிறது. நீல நிறம் உற்பத்தித் திறனை வளர்பததனால் அதிகமான வியாபர நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றது. மனதில் அமைதியையும், தெளிவுத்தன்மையையும் வளர்ப்பதுடன் இளைஞர் மனதில் முதிர்ச்சித் தன்மையை காட்டவும் நீலம் பயன்படுத்தப்படுகிறது.

color
  • பச்சை : இயற்கை, அமைதி, சாந்தம் என்பவற்றினை வெளிப்படுத்துகிறது. அதேவேளை பணம், செல்வம் எனவற்றைப் பிரதிபலிபதாகவும் வாடிக்கையாளர்களை சாந்தப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இயற்கை பற்றிய விளிப்புனர்வினை ஏற்படுத்தவும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.  பச்சை நிறம் மனதில் அமைதியை ஏற்படுத்தவல்லது. உடல் மற்றும் மனதின் உணர்வுகளின் சமநிலையைப் பேணுவதுடன் உறுதியான் தீர்மானங்களை எடுப்பதற்கான உந்து சக்தியையும் தொற்றுவிப்பதாய் அமைகிறது.
  • ஊதா : ஞானம், மதிப்பு மற்றும் உயர் பதிவிகளுடன் தொடர்புடையதாய் விளங்குவதுடன் மூளையின் பிரச்சனைகளை தீர்க்கும் பகுதிகளைத் தூண்டும் நிறமாகும். அழகுசாதன பொருட்களின் விளம்பரங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. புத்தாக்கம், விவேகம், கற்பனாசக்தி சார்ந்த சேவைகளையும் பொருட்களையும் குறிப்பதற்கும் பயன்படுகிறது.
  • மஞ்சள் & செம்மஞ்சள் : பரந்த நம்பிக்கை மற்றும் உற்றசாகம் என்பவற்றை அதிகரிக்கும் நிறமாகும். செம்மஞ்சள் எச்சரிக்கையினை வெளிப்படுத்துவதுடன் மஞ்சள் நிறம் குழந்தைகளை அழச் செய்ய தூண்டுகிறது. விற்பனை ரீதியாக வாடிக்கையாளர்களின் உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்த கூடிய நிறமாகும். மூளையில் தர்க ரீதியாக ஆர்வத்தை தூண்டும் நிறமாக திகழ்கிறது. அதிகளவில் பதட்டமான உணர்வை குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

color-board

வண்ணங்களுக்கான கொள்கைகள்

நிறப்பேதம் (Colour Contrast) : வாடிக்கையாளர்களின் கவனத்தினை கண்களில் எவ்வித சிரமமும் இன்றி  ஒரு புள்ளியில் குவியசெய்வதில் உதவுகின்றது. தலைப்புகளில் அப்பட்டமாக தெரியக் கூடிய நிறங்கள் சிரமமின்றி வாசிக்கவும் குறைந்த செறிவுடைய வண்ணங்களில் பின்னணியும் கூடிய செறிவில் எழுத்துக்களையும் பேணுவது தெளிவுத் தன்மையைப் பேணக் கூடியது. மறுதலையாகவும்  நிறங்களைப் பயன்படுத்தலாம்.

நிறத்துடிப்பு (Color Vibrancy) : பிரகாசமான நிறங்கள் வாசகர்களை புத்துணர்வாக இருக்கச் செய்வதனால் கருப்பொருளை இலகுவாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்பதாயும் ஒன்றோடொன்று சார்ந்த விடயங்களில் ஒரே வகையான நிறங்களை பயன்படுத்துவதும் இதிலடங்கும்.


target-audience

வித்தியாசமான விளைவுகளை ஏற்படுத்த கூடிய நிறத் திட்டங்களாக (Color Schemes),

  • Monochromatic (மொநோகுரோமடிக்) – குறித்த ஒரு நிறத்தை வேறுபட்ட ஒளி நிழல்களை பயன்படுத்தி பயன்படுத்தல். இது இலகுவாக பார்வையிட கூடிய வகையில் வடிமைக்க உதவுகிறது. பெரும்பாலும் வலைதள வடிவமைப்புகளில் பயன்படும்.
  • Complementary (கம்ப்ளிமேன்ட்டரி) – நிறச் சக்கரத்தில் எதிரெதிர் முனைகளிலுள்ள நிறங்களை பயன்படுத்தல். இது தயாரிப்புகளில் அச்சுக்களை ஏற்படுத்தும் போது அதகளவில் பயன்படுத்தப்படும்.
  • 3 நிறத் திட்டம் (Triple Color Scheme) – மூன்று ஒன்றோடொன்று சமனான நிறங்களைப் பயன்படுத்தல். அதிகளவில் இணையதள தலைப்பு வடிவமைப்புகளில் கவர்ச்சித் தன்மையைப் பேண உதவுகின்றது.

சந்தைப்படுத்தலில் நிறங்களின் விளைவுகள்

பொருட்கள் உருவாக்கப் பயன்படும் வண்ணங்கள் வாடிக்கையாளர் மனதில் அதிகளவில் தாக்கம் செலுத்துகிறது. 1% ஆனோர் பொருளின் மணம் அல்லது ஒலி அடிப்படையாகக் கொண்டும் 3% ஆனோர் அலங்காரமான வடிவங்களை அடிப்படியாகக் கொண்டும் 93% ஆனோர் நிறம் சார்ந்த வடிவங்களை  அடிப்படியாக கொண்டும் பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.


பொருட்கள்

பொருளொன்றை தெரிவு செய்கையில் 84.7% ஆனோர் பொருளை குறித்த நிறத்தினை கொண்டு தெரிவு செய்கின்றனர்.   52% ஆனோர் பொருட்களின் நிறம் பிடிக்காமையால்  பொருட்களை மீள வழங்கியுள்ளனர். 80% ஆனோர் நிறங்களை வியாபார நிறுவனங்களின் அடையாளமாக கருதுகின்றனர்.

சந்தப்படுத்தலில் நிறங்களின் பங்கானது தவிர்க்க முடியாததொன்றாக திகழ்கிறது. வினைத்திறனாக பொருட்களை சந்தைப்படுத்தவும் அதிகளவில் வாடிக்கையாளர்களை கவரவும் அநேக நிறுவனங்கள் வெற்றிகரமாக நிறங்கள் பற்றிய கோட்பாடுகளை கையாளுகின்றன என்பதே உண்மை.

Leave your comment
Comment
Name
Email