இலகுவாகவும் வேகமாகவும் படிக்க வேண்டுமா ???

அலைபாயும்  மனதை  கொண்ட  மாணவ பருவத்தில் மனதை ஒரு நிலைப்படுத்தி கவனமுடன் பாடங்களை படித்தால் வாழ்வை எதிர்கொண்டு வெற்றி பெறலாம்.  இந்த உலகத்தில் பிறந்து பள்ளிக்கூடம் சென்று படிக்காமல் தப்பித்துவிட முடியாது. அங்கே  படிக்க வைத்தே உங்களை சாகடித்து விடுவார்கள். படிப்பது என்பது மிக மிக கசப்பானது.

படிக்கும்போது எந்த முறையில் படிக்கிறோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தினை படிக்க முன்னர் அந்த பாடம் முழுவதையும் மேலோட்டமாக ஒருமுறை வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் பாடத்தின் பொருள் புரியாமல் போனாலும் தலைப்புகளை கவனத்தில் கொண்டால் பாடம் எளிதில் மனதில் வந்து விடும். சரியான முறைப்படி படித்தால் எவ்வளவு கடினமாக பாடமாக இருந்தாலும் மனதில் பதிந்துவிடும்.

ஞாபகம்

பாடத்தில் சில குறிப்பிட்ட வார்த்தைகளை ஒருமுறைக்கு இருமுறை சொல்லிபார்த்தால் அந்த வார்த்தைகள் மனதில் பதிந்து மற்ற  வார்த்தைகளை எடுத்துக்கொடுக்கும்.  படித்தவற்றை படித்து முடித்தபின்னர்  உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லி பார்க்க வேண்டும். சாதாரணமாக பாடத்தினை ஞாபகம் வைத்துக்கொள்வதை விட குறிப்புகளால் மனதில் வைத்துக்கொண்டால் எளிதில் மறக்காது.

உங்களால்  வேகமாக படிக்க முடிந்தால் நேரத்தை அதிக அளவில் சேமிக்கலாம். உங்களுடைய படிக்கும் வேகத்தை இரண்டு மடங்காக அதிகப்படுத்துவதற்கு இந்த 4 முறைகளின் மூலம் முயற்சிக்கலாம்.

1.கண்ணாடி முறை (Mirror Technique)

2.வார்த்தை ஓட்ட முறை (Run-through Technique)

3.தலைகீழ் முறை (Upside-down Technique)

4.வேகமாக எழுதும் முறை (speed writing)


1. கண்ணாடி முறை (Mirror Technique)

ஒரு பக்கத்தை எடுத்து மிக வேகமாக படிக்க வேண்டும். அதை கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. பின்னர் அந்த பக்கத்தை கண்ணாடியில் காண்பித்து கண்ணாடியில் தெரிவதை படிக்கவும். அதை படிப்பதற்கு கடினமாக இருந்தாலும் உங்களால் அதை படிக்க முடியும். இந்த பயிற்சியை தினமும் காலை, மாலை 10 நிமிடம் செய்தால் 30நாட்களில் நீங்கள் படிக்கும் வேகம் நம்பமுடியாத அளவிற்கு அதிகரிக்கும்.

கண்ணாடி

2. வார்த்தை ஓட்ட முறை (Run-through Technique)

இப்பயிற்சியை மேற்கொள்ளும் போது படிக்கும் பக்கத்தின்  வார்த்தைகளை மட்டும் வேகமாகப் படிக்க வேண்டும். அதாவது, உங்கள் விரைவான கண்ணோட்டத்தால் ஒவ்வொரு வார்த்தையையும் உடனடியாக அடையாளங்கண்டு அடுத்த  அடுத்த வார்த்தைக்குச் செல்கிறீர்கள். அந்த வார்த்தைகள் உங்கள் மூளையில் காட்சியாகப் பதிவாகிறது. அதாவது பாடப்பகுதியை படங்களாக மனதில் வைத்திருக்கிறீர்கள். இவ்வாறு முறையாகப் பயிற்சி செய்யும் போது மிகப்பெரிய வார்த்தைகளையும் உங்களால் உடனடியாக இலகுவாக அடையாளம் காண முடியும். இதனால் இயல்பாகவே படிக்கும் ஆற்றல் வேகமாக அதிகரிக்கும்.

3. தலைகீழ் முறை(Upside-down Technique)

ஒரு பக்கத்தை வேகமாக படிக்க வேண்டும், அதை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. பின் அதே பக்கத்தை தலைகீழாக மீண்டும் படிக்கவும். இந்த முறையில் படிக்கும் போது காலை, மாலையில் 10 நிமிடம் படித்தால்  நீங்கள் படிக்கும் வேகம் ஒரு மாதத்திற்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

Upside-down

படிக்கும் வேகம் எப்படி அதிகரிக்கிறது?

கண்ணாடியில் தெரியும் பக்கத்தை படிக்கும் போதும், தலைகீழாகப் படிக்கும் போதும், படிப்பதற்குக் கடினமாக இருப்பதால் படிக்கின்ற போது நீங்கள் அதில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டி இருக்கும். இப்படி சில நிமிடங்கள் படித்த பின், அதிக கவனம் செலுத்தி படிக்க உங்கள் மனம் பழகி  விடும். இதன் மூலம் உங்களால் படிப்பில் சிறந்த கவனம் செலுத்த முடியும்.அதன் பின்னர் அந்த பாடப்பகுதியை நீங்கள்  படிக்கும் போது நன்றாகப் பழக்கப்பட்ட நிலையில் இருப்பதால் படிப்பதற்கு மிகவும் இலகுவாகவும் வசதியாகவும் இருக்கும். ஆகவே உங்களால் மிக வேகமாகப் படிக்க முடியும்.

இம்முறைகளில் பயிற்சியெடுக்கும் போது, அதை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை வேகமே அவசியம். பாடத்தைப் புரிந்துகொள்ளாமல் படிக்கும் வேகம் அதிகரிக்கும் போது, நீங்கள் பாடத்தைப் புரிந்துகொண்டு படிக்கும் வேகமும் தானாகவே அதிகரிக்கும்.

கவனம்

இந்த பயிற்சி முறைகளால் உங்கள் படிக்கும் வேகம்  திடிர் அதிகரிப்பு அடைந்திருக்கும்.

இந்த பயிற்சி முறைகளுக்கு மிகமுக்கியத்துவம் கொடுத்து பயிற்சி செய்யவும். இதனால், உங்களுடைய நேரமும், சக்தி, தேர்வு நேரத்தில் ஏற்படும் பரபரப்பும், மன அழுத்தமும் நிச்சயமாகக் குறையும். மற்றும், இரவு பகலாக புத்தகங்களோடு போராட வேண்டிய அவசியமும் இருக்காது.

4. வேகமாக எழுதும் முறை(speed writing)

அறிவு கூர்மையுடன் தன்னை நன்றாக தயார்படுத்தி இருக்கும் மாணவன் , தேர்வு வினாத்தாளில் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் தெரிந்தும் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் குறித்த  மணிநேரத்திற்குள் விடைகளை வேகமாக எழுதி முடிக்காவிடின், அவர் குறைந்த மதிப்பெண்களையே பெறுவார். எனவே, மாணவருக்கு வேகமாக எழுதும் திறன் மிக மிக அவசியமாகிறது. 5 நிமிட நேரத்தில் எழுத வேண்டிய பகுதியை 3 நிமிடத்திற்குள் எழுதி முடிப்பது சவாலானது. ஆனாலும், உங்களால் அந்த நேரத்திற்குள் எழுதி முடிக்க முடியும். இப்படி தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, உங்களுடைய எழுதும் வேகம் படிப்படியாக அதிகரிக்கும்.

Writing

திட்டமிட்டு படிக்கும்  போது படிப்பு சுமையாக இல்லாமல் எளிதாகவும் தெளிவாகவும் இருக்கும். படிப்பதில் பல்வேறுவகைகள் உள்ளன.

1.தானாக படிப்பது.

2.படித்ததை ஒப்பிப்பது.

3.படித்ததை எழுதிப்பார்ப்பது.

4.பாடத்தை பிறருக்கு  சொல்லித்தருவது.

இவற்றில் படித்த பாடத்தை ஒரு ஆசிரியரை  போல்  பிறருக்கு சொல்லித்தருவது சிறந்த படிப்பு.அவ்வாறு சொல்லித்தரும் போது பாடம் மேலும் மேலும் தெளிவாக மனதில் ஆழமாகப் பதியும். பாடத்தை யாராவது ஒருவருக்கு சொல்லித்தரும் போது, அவர் பாடம் சம்பந்தமாக கேட்கும் சந்தேகம் நமக்கு அதுவரையில் தோன்றாமல் இருந்திருக்கும். அவர் கேட்டவுடன், அந்த சந்தேகம் சம்பந்தமாக  மேலும் ஆழமாக படிப்போம்.

exercise

சிறப்பாகப் படிக்க வேண்டுமானால் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.  படிப்பு முக்கியம் என்றாலும் எப்பொழுதும் படித்துக்கொண்டே இருக்காமல் குறைந்தது 7 மணி நேரம் ஒரு நாளைக்கு நிம்மதியாக தூங்க வேண்டும். நாள்தோறும் சில நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தால் தான் உடல் புத்துணர்ச்சி அடைந்து ஞாபக சக்தி அதிகரிக்கும். அமைதியான குடும்பம், நல்ல சுற்றுச்சூழல், நல்ல நண்பர்களை கொண்டிருப்பதும்  கல்வி கற்பதற்கு மிகவும் அவசியமாக  கருதப்படுகிறது.

உணவுப் பொருட்களில் அதிக கொழுப்புள்ளவைகளை உட்கொள்ளாமல் இயற்கை உணவுப்பொருட்கள், பச்சை காய்கறிகள் முதலியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றி படித்தால் வெற்றி நிச்சயம்.

Leave your comment
Comment
Name
Email