Smart Phone ஐ வேகமாக இயங்கச் செய்ய இலகுவான 8 வழிகள் !!!

Android Smart Phone மீது பெரும்பாலானோரால் சுமத்தப்படும் குற்றச்சாட்டு அதன் Hardware அம்சங்கள் சிறப்பானதாக இருந்தாலும் அதன் செயல்பாட்டு வேகமானது சில மாதங்களிலேயே குறைவடைகிறது என்பதாகும். அதனை நிவர்த்தி செய்ய சில இலகுவான வழிகள் கீழே,

1. Widgets ஐ அகற்றுங்கள் அல்லது குறைத்துக் கொள்ளுங்கள்.

இயன்றவரை Home Screen இல் காணப்படும் Widgets இன் எண்ணிக்கையினை குறைவாக பேணுங்கள். உதாரணமாக வானிலை அறிக்கையை காடும்  Widget ஆனது திரையில் அதிகளவு தாக்கம் செலுத்துகிறது. இது பின்னணியில் தொடர்ச்சியாக Refresh செய்வதனால் அதிகளவு நினைவகத்தினை பயன்படுத்துகிறது. எனவே இவ்வாறான Widgets ஐ அகற்றுவது சிறப்பானது.  


mobile widgets

2. பயன்படுத்தாத Apps ஐ Delete அல்லது Disable செய்யுங்கள்.

SmartPhone இன் திரையில் அதிகளவில் Apps நிறைந்திருக்கும்  சந்தர்பத்தில் அதில் அநேகமானவை நாம் பயன்படுத்துவதில்லை என்பதை அறிவதில்லை. அவ்வாறு Apps நிறைந்திருக்கும் போது திரையை மாற்றுவதற்கும் குறித்த App இனை தெரிவு செய்யவும் அதிக நேரம் எடுக்கும். இதே போன்று Games, Social Networks, Photography, Movies, Utilities என வகைப்படுத்தி Folder களை பேணுவதன் மூலம் இயன்றவரை வேகத்தை பேணவும் இலகுவாக App இனை தெரிவு செய்யவும் முடியும்.  இதே போன்று நீண்ட கால பாவனையில் இல்லாத App இனை Application Manager இன் உதவியுடன் Disable செய்வது நல்லது.


delete-apps

3. Android System ஐ Update செய்யுங்கள்.

பலர் தாம் வாங்கும் போது தம் Smatphone உடன் Install செய்து தரப்படும் அதே System Software மற்றும் Firmware Version களையே பயன்படுத்துகின்றனர். Smart Phone களின் சிறப்பம்சமே அவை புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படும் போது இலகுவாக Update செய்து பயன்படுத்தக் கூடியதாக உள்ளதே ஆகும். பெரும்பாலான Updates நமது SmartPhones வேகமாகவும் சிறப்பாகவும் செயல்பட உதவுகின்றன. எனவே உற்பத்தியாளர்கள் மூலம் Updates வரும் போது அதனை Install செய்ய வேண்டும்.


system-updates

4. பயன்படுத்தும் Apps இன் மாற்றீடு Lite Version களைப் பயன்படுத்துங்கள்.

அநேகமான சந்தர்ப்பங்களில் SmartPhone களின் வேகம் குறைவாக இருப்பதற்கு காரணமாக அதன் Hardware அமைவதில்லை மாறாக அதன் Software இன் அளவு அதிகளவு Smartphone இன் நினைவகத்தை பயன்படுத்துவதே காரணமாகும். எனவே இவ்வாறன Apps இற்குப் பதிலாக Lite Version களை பயன்படுத்தலாம். உதாரணமாக Facebook Lite, YouTube Lite போன்றவை PlayStore இல் பிரபல்யமாகவுள்ளன.


facebook-lite

5. Live Wallpaper, Animation களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

Animation பின்னணிகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதிகளவு நினைவகம் மற்றும் Battery இணைப் பயன்படுத்துகின்றன. இயன்றவரை புகைப்படங்களை பயன்படுத்துவதுடன் குறைந்த அளவிலான Animation Effects பயன்படுத்துவது SmartPhone ஐ வேகமாக இயங்கச் செய்யும்.

6. Sync செய்து பேணும் கணக்குகளின் எண்ணிக்கையை குறைவாக பேணுங்கள்.

சமூக வலைத்தளங்களுடன் ஒன்றிணைந்து இயங்கும் கணக்குகளான Gmail Store photos, email, facebook போன்ற கணக்குகளை எப்போதும் Sync செய்திருப்பது பின்னணியில் அதிகளவு நினைவகத்தினை பயன்படுத்துகின்றன.


mobile-sync

7. பயன்படுத்தாத files அகற்றுங்கள்

நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ராக்கைகளை போன்றதே smartphone இன் நினைவகங்களாகும். அதிகளவில் பொருட்கள் அடுக்கப்படும் போது எவ்வாறு பொருளொன்றை எடுப்பது கடினமோ அது போல அதிகளவு files இனை சேமிப்பது நினைவகத்தின் கொள்ளளவில் அதிகளவில் தாக்கத்தை ஏற்ப்படுத்தும்.  SmartPhone இன் வேகத்தையும் பெருமளவில் பாதிக்கும். எனவே பதிகளவில் பயன் படுத்தது கிடப்பில் போடப்படும் Files ஐ வேறிடங்களுக்கு மாற்றியோ அல்லது அழித்தோ விடுவது சிறந்தது.


mobile-files

8. பிரச்சனை ஏற்படும் தொடக்க இடத்தை அறிந்து கொள்ளுங்கள்

பிரச்சனையின் ஆரம்ப கட்டத்தை அறிந்து கொள்வதன் மூலம் இயன்றவரை SmartPhone களை மிக வேகமாக இயங்கச்செய்ய முடியும். Applications, Multiple Apps போன்றவை ஒட்டுமொத்தமாக System இன் செயல்திறனில் தாக்கம் செலுத்துகின்றன. இதனை கண்டறிவதற்கு Qualcomm இனால் வெளியிடப்பட்ட  Trepn Profier  App ஆனது பெருமளவில் உதவுகிறது.

உங்கள் Smart Phone களின் அனுபவங்களையும் அதனை நிவர்த்தி செய்யும் வேறு சில வழிகள் இருப்பின் அதனையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave your comment
Comment
Name
Email