ஸ்டீஃபன் ஹாக்கிங், ஆக்ஸ்ஃபோர்டில் இயற்பியல் பட்டம் பயின்றார். இளவயதிலேயே அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்கெலரோசிஸ் என்ற நரம்பியக்க நோயால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. கேம்பிரிட்ஜில் நியூட்டன் வகித்த பதவியான லூக்காசியன் கணிதவியல் பேராசிரியர் பதவியினை வகித்தார்.
பெருவெடிப்புக் (Big Bang) கொள்கைக்கான கணிதப்பூர்வ நிரூபணத்தை அளித்ததன் மூலம் இயற்பியல் உலகில் புகழின் உச்சிக்கு வந்தார், ஸ்டீஃபன் ஹாக்கிங். இம்முழு பேரண்டமும் ஒரு சிறு புள்ளியிலிருந்து வெடித்து வெளிப்பட்டது என இக்கொள்கை கூறுகிறது. அப்புள்ளியானது முடிவற்ற சிறிய புள்ளியாகவும், முடிவற்ற அடர்த்தியுடனும், முடிவற்ற நிறையீர்ப்பு கொண்டதாகவும் இருந்தது. ரோஜர் பென்ரோஸ் (Roger Penrose) என்பவருடைய கணித நுணுக்கங்களை பயன்படுத்தி தன்னுடைய நிரூபணங்களை ஹாக்கிங் நிறுவினார். இந்நுணுக்கங்கள் அண்டப்பிறப்பினை பற்றி ஆராய்வதற்காக மேம்படுத்தப்பட்டவை அல்ல, மாறாக கருந்துளைகளை (Black holes) பற்றி ஆராய்வதற்காக வளர்த்தெடுக்கப்பட்டவை.S
போதியஅளவு பெரிய விண்மீன்கள் தன்னுடைய இறுதி காலத்தின்போது வலுவிழந்து அதனுள் இருந்த அனைத்து விஷயங்களும் நசுக்கப்பட்டு முடிவற்ற சிறுபுள்ளியாக முடிவற்ற நிரையீர்ப்பு, அடர்த்தி கொண்ட ஒற்றையாக சுருக்கப்படுகின்றன என விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. ஆனால் பேரண்டத்தின்பிறப்பு என்பது கருந்துளையின் மறுதலை என ஹாக்கிங் உரைத்தார்.
பொருட்கள் நசுக்கப்பட்டு ஒற்றைப்புள்ளியாக ஆவதற்கு மாறாக, இப்பேரண்டத்தில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்தும் ஓர் ஒற்றை புள்ளியிலிருந்து பிரவாகமெடுத்தவை தான். இப்பேரண்டத்தை (Universe) முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ள வேண்டுமானால் கருந்துளைகள் பற்றிய ரகசியம் முடிச்சவிழ்க்கப்பட வேண்டும் என்றார் ஹாக்கிங்.
கருந்துளைகள்:
கருந்துளைகளோடு நட்பாடுவதற்காக ஹாக்கிங் மற்றும் சக இயற்பியலாளர்கள் அறிவுப்பூர்வ இலக்கு நோக்கிய பயணத்தை தொடங்கினார். பேரளவிலான அண்டப்பொருள் இயற்பியலை மட்டுமே கருந்துளை ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டது. நிறையீர்ப்பின் இயற்பியல் நியூட்டனால் முதலில் வளர்க்கப்பட்டு ஐன்ஸ்டீனுடைய பொது மற்றும் சிறப்பு சார்பியல் மூலம் பின்னர் வார்த்தெடுக்கப்பட்டது.
கருந்துளைகளை பற்றி முழுவதும் அறிந்துகொள்ள சிறிய அளவிளான அண்டப்பொருள் இயற்பியலையும் பயன்படுத்தவேண்டும் என்றார் ஹாக்கிங். சிறிய அளவிலான அண்டப்பொருள் இயற்பியல் என்பது அணு, அணுக்குள் நிகழும் இயக்கங்களைப் பற்றி விளக்ககூடிய குவாண்டம் இயங்கியல் ஆகும்.
இதற்கு முன் யாரும் இவ்விரு இயற்பியல் களங்களை இணைத்துப் பார்த்ததில்லை. கருந்துளையின் அடர்நிறையீர்ப்புக்குள் குவாண்டம் இயங்கியலையும் ஐன்ஸ்டீனுடைய சார்பியலையும் ஒரே சமயத்தில் நிலைநிறுத்தக்கூடிய புதிய வழியைப் பற்றி ஹாக்கிங் சிந்தித்தார்.
ஹாக்கிங் கதிரியக்கம்:
கருந்துளைகளைப் பற்றி அறிந்திருந்த அனைவரும் அனைத்து விஷயங்களும் கருந்துளைக்குள் விழுந்துவிடும், ஒளி கூட தப்புவதில்லை என்றே கருதினார்கள்.
ஆதலால் ஹாக்கிங் மேலும் பரிசோதித்தார், மேலும் அதிகமாக அவருடைய கருத்து சரி என அறிந்துகொண்டார். கருந்துளையிலிருந்து கதிரியக்கம் வெளிப்படுவதை கண்டார். கருந்துளைகள் ஆவியாகி மறைந்துபோவதற்கு இக்கதிரியக்கம் தான் காரணம் என ஹாக்கிங் மெய்ப்பித்தார். இது “ஹாக்கிங் கதிரியக்கம்” என அழைக்கப்படுகிறது.
கருந்துளைகளின் ஆவியாதல் குறித்த ஹாக்கிங் கொள்கை புரட்சிகரமானதாகவும், வினோதமானதாகவும் இருந்த போதிலும் பெருமளவில் எற்றுக்கொள்ளப்பட்டது. அடிப்படை முக்கியத்துவத்திலிருந்து இவை வெகுதொலைவில் இருப்பதை ஹாக்கிங் அறிந்திருந்தார். 1976ல் “The breakdown of predictability in garaviational collapase” என்ற ஆய்வுத்தாளை அவர் வெளியிட்டார். அவ்வாய்வுத் தாளில் “அங்கு கருந்துளை மட்டும் மறைந்துபோவதில்லை, அதனுள் உறிஞ்சப்பட்ட அனைத்து விஷயங்களும் மறைந்து போய்விடுகின்றன” என அவர் வாதிட்டார்.
ஹாக்கிங்கின் கருத்துக்கள் கருந்துளைகளுக்கு மட்டும் பொருந்தக்கூடியதல்ல, மாறாக இயற்பியலின் அனைத்து செயல்களுக்கும் பொருந்தக்கூடியது என இருவரும் உணர்ந்தனர். “ஹாக்கிங் கருத்து மெய்யாக இருக்குமானால் அது இயற்பியல் முழுவதையும் பாதிக்கும்; காரணத்திற்கும் காரியத்திற்கும் நேரடி தொடர்பற்று போகும்; இயற்பியல் வலுவிழந்து போகும்” என சஸ்கின்ட் கூறினார்.
சான்பிரான்ஸிஸ்கோ சந்திப்பிலிருந்து “தகவல் முரண்மெய்மை” யானது இயற்பியலின் மிகவும் அடிப்படையான மிகவும் கடினமான பிரச்சினையாக உருவெடுத்தது. விவாதங்கள் சூடுபிடித்தன, சஸ்கின்ட்ன் மற்றும் ஹாக்கிங்கின் கருத்தினை தவறென்போர் ஒர் அணியாகவும் ஹாக்கிங் மற்றும் அவரது சகாக்கள் மற்றோர் அணியாகவும் வாதிட தொடங்கினர்.
தொடர்ந்து 20 ஆண்டுகள் அனல் பறக்கும் விவாதத்திற்கு பிறகும் கூட இரு அணியினரும் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.
ஜூவன் மால்டசீனா (Juan Maldacena), அர்ஜென்டினாவின் இளம் கணித மேதையுடைய ஆய்வுத்தாள் வெளியானது. கருந்துளையினுள் இருந்த விஷயங்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய மிகக்கண்டிப்பான கணிதப்பூர்வ விளக்கத்தை அளித்தது அவ்வாய்வுத்தாள். ஆம், மால்டசீனாவின் வெளியீடு கருந்துளையினுள் உள்ள விஷயங்களுக்கு ஒன்றும் நேர்வதில்லை என உரைத்தது. ஆனாலும் ஹாக்கிங் சமாதானமடையவில்லை.
கிறிஸ்டோப் கால்ஃபர்ட் என்ற இளம் ஆராய்ச்சி மாணவருடன் இணைந்து மால்டசீனாவின் நிரூபணங்களை உடைக்க ஹாக்கிங் முனைந்தார். 2 ஆண்டுகளாகியும் அதனை முறியடிக்க இயலவில்லை.
அச்சமயம் ஒர் பேரிடர் நேர்ந்தது. ஹாக்கிங் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹாக்கிங் மரணமடைந்துவிடுவார் என அனைவரும் கவலையடைந்தனர். ஆனால் அதன் பின் 30 ஆண்டுகளாகியும் ஜீவித்துக்கொண்டுள்ளார்.
இன்றுவரை முழுவதும் நிரூபிக்கப்பட்ட நிருபணங்களை ஹாக்கிங்கினால் கொடுக்கமுடியவில்லை. அவர் சக்கரநாற்காலியில் அமர்ந்துக்கொண்டு, கண்களின் அசைவால் கண்ணியோடு உறவாடி தன்னுடைய கருத்தினை நிரூபிக்க முனைந்துக்கொண்டிருக்கிறார் அவர் வெற்றிபெற்றுவிட்டால், அது அவருடைய நாயகன் ஐன்ஸ்டீனுடைய சாதனையைவிட மிகப்பெரிய சாதனையாக திகழும்.
பிரபஞ்சவியலில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்த இவர், பிளாக் ஹோல் (Black Hole), பிக்பேங் தியரி (Bigbang Theory) ஏலியன் (Alien), டைம் மெஷின் (Time Machine) என அந்த அறிவியல் துறையில் சாதித்த விஷயங்கள் ஏராளம்.
ஆரோக்கியமான உடலமைப்பைப் பெற்ற ஒருவராலேயே நினைத்துப் பார்க்க முடியாதவை அவர் புரிந்த சாதனைகள். அவருக்கு ‘Amyotrophic Lateral Sclerosis’ என்ற குறைபாடு இருந்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் இந்தப் பாதிப்புக்குள்ளான ஸ்டீபன் ஹாக்கிங் அதனால் சற்றும் மனம் தளர்ந்து போய்விடாமல் எண்ணற்ற சாதனைகளைப் படைத்தார்.
ஸ்டீபன் ஹாக்கிங் ‘Anterior horn cell disease‘ என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பொதுவாக, நம் மூளையிலிருந்து மூன்று வரிசைகளாக (order) நரம்புகள் வெளியே செல்லும். மூளையிலிருந்து நேரடியாக முதுகெலும்புக்குச் செல்வது முதல் வரிசை. அடுத்ததாக, முதுகெலும்பிலிருக்கும், Anterior horn cell என்ற இடத்திலிருந்து கை, கால்களுக்குச் செல்லும் நரம்புகள் இரண்டாவது வரிசை. இதில் Anterior horn cell பாதிக்கப்பட்டால், நம் உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் தடைபடும். உதாரணமாக, கை, கால் நரம்புகள் செயலிழந்து போகும். உடலை அசைக்க முடியாது. பேச்சு வராது. எதையும் விழுங்குவதற்குச் சிரமமாக இருக்கும். மூளை, கையைத் தூக்க வேண்டும் என்று நினைத்தாலும் கை, கால்களை அசைக்க முடியாது. எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது, `புரொக்ரஸ்ஸிவ் டிஜெனரேட்டிவ் டிசீஸ்’ (Progressive degenerative disease). செல்களை முழுமையாகச் சிதைத்துவிடும். ஒருமுறை இந்தப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், பின்னர் குணப்படுத்துவது என்பது இயலாத காரியம். இது ‘Amyotrophic Lateral Sclerosis’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
ஸ்டீபன் ஹாக்கிங்கும் இந்தப் பாதிப்புக்குத்தான் ஆளாகியிருந்தார். இதனால் சுவாச மண்டலமும் பாதிப்படையும். ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு இரண்டு முறை ட்ரக்கியோஸ்டமி (Tracheotomy) செய்யப்பட்டிருக்கிறது. தன் 40-வது வயதில் முழுமையாகப் பாதிக்கப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங், ஐம்பது வயதில் வீல்சேரில் அமரும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். ஒருமுறை பேசும்போதே ரத்த வாந்தியும் எடுத்திருக்கிறார்.
இந்தப் பாதிப்பில் கை, கால்கள் செயலிழந்து போனாலும், மூளை சிறப்பாகச் செயல்படும். அதற்கு, ஆகச்சிறந்த உதாரணமாக ஸ்டீபன் ஹாக்கிங் இருந்தார்.
இத்தனை பாதிப்புகளையும் தாண்டி எப்படிச் சாதித்தார் ஸ்டீபன் ஹாக்கிங்?
“ஸ்டீபன் ஹாக்கிங் இந்தப் பாதிப்புக்கு ஆளானபோது, அவர் இன்னும் கொஞ்ச காலம்தான் உயிர் வாழ்வார் என்று அனைவரும் நினைத்தார்கள். அதற்குக் காரணமும் இருந்தது. அவர் உடலிலுள்ள தசைகளின் இயக்கம் முழுமையாக நின்று போனது. பேசவும் முடியாமல் போனது. ஒருவேளை உயிர்வாழ்ந்தாலும்கூட கோமா நிலையில்தான் இருப்பார் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். `ஸ்டீபன் ஹாக்கிங் சாப்டர் குளோஸ்’ என்ற முடிவுக்கே பலரும் வந்திருந்தார்கள். ஆனால், ஸ்டீபன் ஹாக்கிங் அப்படி நினைக்கவில்லை. வாயால் பேச முடியாவிட்டாலும், சைகையின் மூலமாகப் பேச முயற்சி செய்தார்.
கம்ப்யூட்டர் துறையும் அப்போதுதான் வளர்ச்சியடையத் தொடங்கியிருந்தது. இது ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு மிக சாதகமாக அமைந்துபோனது. விரல் அசைவின் மூலமாக தட்டச்சு செய்து, அதை கம்ப்யூட்டரைப் பேசவைத்து மற்றவருடன் கம்யூனிகேஷன் வைத்துக்கொண்டால்? அதற்கும் வழி பிறந்தது. ஸ்டீபன் ஹாக்கிங்கின் நண்பர் ஒருவர் இதற்காகவே, இவருக்காகவே பிரத்யேகமான சாஃப்ட்வேர் ஒன்றை உருவாக்கினார். அதன் உதவியோடு பிறரிடம் பேசிவந்தார் ஸ்டீபன். அவரால் பிறர் பேசுவதைக் கேட்க முடியும் என்பதால் இந்த கம்ப்யூட்டர்வழி தகவல் பரிமாறும் வசதி எளிதாக இருந்தது.
தன் இறுதி ஆண்டுகளில், பேச நினைப்பதை முகம் மற்றும் தாடை அசைவின் மூலமாக மொழிபெயர்ப்பு செய்யும் இயந்திரத்தின் உதவியோடு பேசினார்.
மிகச்சிறந்த கணிதவியலாளர். இறுதிவரை புதிய புதிய விஷயங்களைக் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தார். அதேபோல, தான் கண்டுபிடித்த விஷயங்களையே மீள்பார்வை செய்து அதில் மாற்றங்கள் இருந்தால், அதை ஒப்புக்கொண்டு வெளி உலகுக்குச் சொன்னவர் அவர். உதாரணமாக, ஆரம்பத்தில் “பிளாக் ஹோல்களுக்கு மரணமே இல்லை” என்றார். பின்னர், அதை மீளாய்வு செய்து, அதுவும் அழிந்து அதற்குள்ளிருந்த ஆற்றல் பிரபஞ்சத்துக்குள் திரும்பி வரும் என்பதைக் கண்டறிந்து உலகுக்குச் சொன்னவர் அவர்தான்.
விஞ்ஞானியாக, சிறந்த பகுத்தறிவுவாதியாக, மனிதநேயமிக்கவராகத் திகழ்ந்தார். தன் சொந்த நாடான இங்கிலாந்தும், கூடவே அமெரிக்காவும் அணுகுண்டுகளை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தவர். “அது மனிதகுலத்துக்கு எதிரானது” என்றும் குரல் கொடுத்தவர்.
மிகக் கொடுமையான உடல் பாதிப்புக்குள்ளாகியிருந்தும், எண்ணற்ற சாதனைகள் புரிந்தவர். அவரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் “தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்?” அறிவியலுக்கு மகத்தான இழப்பு அவரது மரணம்’’ .
ஆகவே நான் எழுதிய வரிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். வேறு ஏதும் தகவல்கள் நான் கூறாமல் விட்டிருப்பின் அதனை என்னுடன் பகிருங்கள்!!!