வியத்தகு வேகத்துடன் 5G Network அறிமுகம் .

வியக்க வைக்கும் விஞ்ஞான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தினந்தோறும் எத்தனையோ எண்ணற்ற கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது மட்டுமல்லாமல் அவற்றை பற்றி அறிந்தும் கொள்கின்றோம். ஆரம்ப காலங்களில் ஊருக்கு ஒரு தொலைபேசி என்றிருந்தது பின் விஞ்ஞான வளர்ச்சியால் வீட்டுக்கு ஒரு தொலைபேசி அனால் தற்போது ஆளுக்கு ஒன்று அல்லது அதை விட அதிகமாக காணப்படுகின்றது. தற்போது ஸ்மார்ட் போன் அனைவரையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது. இன்று நாம் காலையில் எழுந்ததும் முதலில் பார்ப்பதும் தொலைபேசி தான் இரவு நித்திரைக்கு செல்ல முன் இறுதியாக பார்ப்பதும் தொலைபேசி தான் . தற்போது வருகின்ற ஸ்மார்ட்போன்கள் மற்றும் பயன்படுத்தும் apps இணைய வசதி இன்றி இயங்குவதில்லை. ஸ்மார்ட் போன் பாவணையாளர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளில் 3G , 4G உம் உண்டு. நாம் அறிந்தவை இவையே அனால் இவற்றின் ஆரம்பம் , முடிவு எங்கே? 1G இல் ஆரம்பித்து 5G இல் தற்போது உள்ளோம்.


1-5G

1st generation ( 1G ) ஆனது கதைப்பதற்கு மட்டுமே ( voice call only ) பயன்பட்டது. அதன் அடுத்தபடியாக 2G .இது கதைப்பதற்கு மட்டுமல்லாமல் குறுஞ்செய்திகளை அனுப்பவும் சிறு சிறு browsing தேவைகளுக்கும் பயன்பட்டது. இதன் அடுத்த வளர்ச்சி 3G . இது 2G உடன் ஒப்பிடுகையில் அதிக வேகமானது. 3G இன் 8 மடங்கு வேகத்தை கொண்டது தான் 4G இது அதிகப்படியான தரவுகளை தரவிறக்கம் செய்யவும் தரவேற்றம் செய்யவும் உலகின் அணைத்து இடங்களிலும் பயன்பாட்டில் உள்ளது.

தொலைபேசிகளுக்கு கிடைக்கும் signal coverage இன் அளவிற்கு ஏற்ப இணையத்தின் வேகம் தங்கியுள்ளது. signal coverage கூடிய இடங்களில் அதி வேக இணையமும் signal coverage குறைந்த இடங்களில் குறைவான வேக இணையமும் (internet ) உம் கிடைக்கின்றது. signal coverage கிடைக்கும் விகிதத்தை கூட்டுவதற்கு கூடியளவான signal tower ஆங்காங்கே நிர்மாணிக்கப்படுகின்றன. உயர் மரங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், மழை, இணையத்தை பயன்படுத்துவோரின் அளவு என்பன தொலைபேசிக்கு கிடைக்கும் signal coverage ஐ குறைகின்றது. இது போன்ற பிரச்சனைகளின் தீர்வு தான் 5G .


5G

இதன்  வேகமானது 4G இன் வேகத்தைப்போல் ௧௦ மடங்கு அதிகம். இதன் அதிகூடிய INTERNET speed 10 gbps . 5G இல் இரண்டு முக்கிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள்.

1. Massive MIMO (Multi Input and Multi Output).

Mobile Signal Towers இல் port எனும் பகுதியே தரவுகளை பரிமாற்றம் செய்கின்றது. 5G இல் பரந்த signal coverage கிடைப்பதுடன் இதன் தரவு பரிமாற்ற வேகம் 1ms என்பதால் விரைவாக தரவுகள் பரிமாறப்படுவதுடன் தடங்கல்கள் இல்லாத இணைய வசதியை பெற்று கொள்ளலாம்.


Massive-Mimo
2. Beam forming

Mobile Signal Tower இன் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவற்றிலிருந்து தொலைபேசிக்கு கிடைக்கும் signals ஒன்றுடன் ஒன்று குறுக்கிடுவதால் அதிவேக இணைய வசதியினை எம்மால் பயன்படுத்த முடியாமல் போகும். அதனை நிவர்த்தி செய்யும் முகமாக உருவாக்கப்பட்டது தான் Beam forming. Beam forming தொழில்நுட்பமானது தொலைபேசிக்கு மிக அண்மையில் எந்த mobile signal tower உள்ளதோ அதிலிருந்து மட்டுமே தரவுகளை பரிமாற்றம் செய்கின்றது. இதனால் 5G இன் அதி கூடிய இணைய வசதியை பெறுவதுடன் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அதிகூடிய இணைய வசதியை பெற முடியும்.


Beamforming

Samsung, Intel, Qualcomm, Ericsson, ZTE போன்ற பெரிய நிறுவனங்கள் 5G இன் அபிவிருத்திக்காக பல கோடி மதிப்புள்ள பணத்தை முதலிட்டுள்ளது. இருந்தும் 2020 ம் ஆண்டே உலகம் முழுவதும் 5G பாவனைக்கு கிடைக்கப்பெறும். அனால் 2018 ம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற இருக்கின்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியை காண வருபவர்களுக்கு 5G இன் முன்மாதிரியான இணைய வசதியை பயன்படுத்த முடியும். அத்தோடு verizon நிறுவனமானது அமெரிக்காவின் நான்கு நகரங்களுக்கு இந்த வருடம் 5G இணைய வசதியை வழங்க உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் இணையம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கும் காரணத்தால் 5G Network பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும் அல்லவா? அப்படியாயின் உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடுங்கள்.

Leave your comment
Comment
Name
Email