“மீன் பாடும் தேன் நாடு” என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பில் சுற்றிப் பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. பாசிக்குடா கடற்கரை மட்டகளப்பிற்கு வடக்கே 34 Km தூரத்தில் அமைந்துள்ளது. இது ஆழமற்ற ஒரு சுறுசுறுப்பான கடற்கரை ஆகும். மட்டக்களப்பு கலங்கரை விளக்கு இது 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
கல்லடி பாலத்திலிருந்து (லேடி மன்னிங் பாலம்) சப்தமற்ற இரவு நேர முழுமதி தினங்களில் அவதானிக்கும் போது ஓர் இன்னிசை கேட்பதாகக் கூறப்படுகிறது. இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசையென நம்பப்படுகின்றது. இதனை இலக்கியங்களில் ‘நீரரமகளீர் இசைக்கும் இசை’ என வர்ணிக்கப்படுகிறது. ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு ‘மீன் பாடும் தேன் நாடு’ எனப் பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றது.
இது ஒரு அழகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது.இது ஒரு கடலோர சுற்றுலா துறைக்குரிய நகரம் ஆகும். இதற்கு அருகில் உள்ள கல்குடா இணைந்து பாசிக்குடா ஆனது. 2004 ம் ஆண்டு ஏற்படட பாரிய இயற்கை அணர்த்தமாகிய சுனாமி மற்றும் உள்நாட்டு போர் போன்ற பெரும் ஆபத்துக்கள் ஏற்பட்ட்து. ஆனாலும் இப்பொது இக் கடற்கரையானது மிகவும் அழகான முறையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு பிரபலமான சுற்றுலா தளமாக காணப்படுகின்றது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மண்முனை மேற்கு பகுதியில் இயற்கை அழகுடன் மனதை கவரும் விதத்தில் பாசிக்குடா அமைந்துள்ளது.
பாசிக்குடா கடற்துறை ஆனது இலங்கையின் முதலீட்டிலும் அதிகளவு பங்கு வகிக்கின்றது. அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் சமீபத்தில் மிகையாக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை அமைச்சு தகவல் வெளியுட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பசிக்குடாவில் பிரபல்யமான மாரியம்மன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. இது மட்டக்களப்பு , திருகோணமலை வீதியின் நடுவே அமைந்துள்ளது.
பாசிக்குடாவின் அருகில் அமைந்துள்ள மட்டக்களப்பு விமான நிலையமானது கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரிந்த ஒரு சிறிய விமான நிலையமாகும்.
அலைகளின் அகோரமில்லாத, ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு, முருகைக்கற்பாறைகள், கடற் தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் இயற்கை வனப்பும், உல்லாச விடுதிகளும், கிடுகுகளால் அழகுற,நேர்த்தியாக வேயப்பட்ட “கபாணா” என்றழைக்கப்படும் உல்லாச விடுதிகளும், படகுச் சவாரிக்கு ஏற்ற கடலும், பாசிக்குடாவின் சிறப்புக்களாகும்.
பாசிக்குடா சுற்றுலா விடுதிகள்
இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் பல சுற்றுலா விடுதிகள் காணப்படுகின்றன. இங்கு சகலவிதமான நட்ச்சத்திர விடுதிகளும் உள்ளன. இந்த விடுதிகளில் free WIFI , swimming pool போன்ற வசதிகளும் காணப்படுகின்றன.
குறிப்பாக 2009 ம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் சுனாமி மறுவாழ்வு மற்றும் புணர்நிர்மான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களினது மனம் கவர்ந்த சுற்றுலா தளமாக மாறிவிட்டது. பாசிக்குடா உலகின் ஆழமான கடற்கரையில் ஒன்றாகும். இக் கடலானது இலங்கை கடலோர பகுதியுடன் ஒப்பிடுகையில் மிகவும் ஆழம் குறைந்த கடற்கரையாகவே காணப்படுகின்றது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இங்கு அதிகளவில் முதலீடுகளை இடுகின்றனர். இது ஒரு முதலீட்டு மையமாகவும் காணப்படுவதே இதற்கு காரணமாகும்.
பாசிக்குடா (Pasikudah) என்பது மட்டக்களப்பிலிருந்து 35 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோர பிரதேசமாகும். வாழைச்சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட இவ்விடம் இலங்கையின் மிகவும் அழகான கடற்கரைகளுள் ஒன்று ஆகும். புகழ்பெற்ற உல்லாச பயணிகளைக் கவரும் இடமாக இருந்த இது ஈழப் போர் இடம் பெற்றதனால் இதன் உல்லாச பயணிகளை இழந்தது. 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மேலும் நிலைமையை மோசமாக்கியது. ஈழப் போர் முடிவுற்றதும் இப்பகுதி உல்லாச பயணிகளை உள்வாங்கும் இடமாக மாறி வருகின்றது.
அலைகளின் அகோரமில்லாத, ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு, முருகைக்கற்பாறைகள், கடற் தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் இயற்கை வனப்பும், உல்லாச விடுதிகளும், கிடுகுகளால் அழகுற,நேர்த்தியாக வேயப்பட்ட “கபாணா” என்றழைக்கப்படும் உல்லாச விடுதிகளும், படகுச் சவாரிக்கு ஏற்ற கடலும், பாசிக்குடாவின் சிறப்புக்களாகும்.
பாசிக்குடா ஆனது ஏராளமான ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் ஆழமற்ற கடற்கரை கொண்ட பரபரப்பான ஒரு சுற்றுலாத்தளம் ஆகும். இதற்கு மாறாக, கல்குடா கடற்கரையானது உள்நாட்டுப் போர் மற்றும் 2004ல் ஏற்பட்ட சுனாமி காரணமாக பெரும்பாலும் வெறிச்சோடியே காணப்படும்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பாசிக்குடா கடற்கரை சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்து வருகின்றது.
இருப்பினும், அதன் அழகைக் குறைக்கும் வகையில் அதன் சுற்றுச்சூழல் மாசடைந்து காணப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை நாட்டின் இயற்கையின் உறைவிடமான கிழக்கின் பாசிக்குடா கடற்கரையைப் பார்வையிட பெருந்திரளான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
உல்லாசப் பயணத்துறையின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றி வரும் பாசிக்குடா மற்றும் அதன் சுற்றுச்சூழல் உரிய பராமரிப்பின்றி காணப்படுவதாகவும் அங்கு காணப்படும் அதிகளவிலான முருகைக் கற்களினால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.
மேலும், கரையோரத்தில் காணப்படும் அசுத்தமான நீரோடை கடல் நீரோடு சங்கமிக்கும் பிரதேசம் மணல் திட்டியாக சீரற்று உள்ளதோடு கழிவுப் பொருட்கள் அதில் காணப்படுவதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் குற்றம் சுமத்தினர்.
இயற்கையின் கொடையான அழகை பேணிப்பாதுகாப்பது நம் அனைவரினதும் தார்மீக பொறுப்பாகும்.
பாசிக்குடா கடற்கரையின் ஒரு பகுதி, அலைகள் குறைவான, மட்டமான நீரினை உடையதும் முருகைக்கற்கள் நிறைந்ததும் நீந்துபவர்களுக்கு மிகவும் இதமானதுமாகும்.