நிலவுப் புத்தாண்டு பற்றிய சுவாரஸ்யமான விடயங்கள்!!

சீனாவிலும் சீன மக்கள் செறிந்து வாழும் நாடுகளிலும் கொண்டாடப்படும் நிலவுப் புத்தாண்டானது ஆசியாவின் அதிக மக்களாலும் உலக மொத்த சனத்தொகையில் 20% மேற்பட்டவர்களாலும் கொண்டாடப்படும் விழாவாகும். இது சீனாவில் விளைச்சலை முதலாக கொண்டு அறுவடை திருவிழா எனவும் பிற நாடுகளில் நிலவுப் புத்தாண்டு எனவும் அழைக்கப்படுகிறது. இதனைப் பற்றி அறிந்திராத சில தகவல்களை காணலாம்.

சீனப் புத்தாண்டு திகதியை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுவதில்லை. இதனை முழு நிலவை அடிப்படையாக் கொண்டுகணிப்பதுடன் ஒரே நாளில் இதன் கொண்டாட்டம் முடிவடைவதில்லை. சுமார் 15 நாட்கள் வரை நீடிக்கும் இக் கொண்டாட்டம் இந்த வருடம் பெப்ரவரி 16 முதல் மார்ச் 3ம் திகதி வரை நீடிக்கின்றது.

Nian

இந்த விழாவானது முக்கியமாக நல்ல விளைச்சலையும் அறுவடையையும் தருவதற்காக கடவுளை வேண்டியும் தம் முன்நோர்களின் ஆசி வேண்டியும் கொண்டாடப்படுகிறது. இருந்தும் புராதன கதைகளின் படி Nian எனப்படும் கொடிய அரக்கன் ஒவ்வொரு புத்தாண்டிலும் வெளிவருவதால் மக்கள் வீடுகளில் ஒளித்துக் கொள்வதாகவும் ஆனால் ஓர் நாள் வீரமான சிறுவன் ஒருவன் பட்டாசுகளைக் கொண்டு அதனை விரட்டியடித்ததாகவும் அதனை நினைவு கூர்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பட்டாசுகள் இவ் விழாவின் முக்கிய அம்சமாகவும் கருதப்படுகிறது.

புத்தாண்டின் மாலை முதல் மறுநாள் காலை வரை அதிஷ்டத்தை தரும் எனும் நம்பிக்கையில் நாடு முழுவதும் பட்டாசுகள் கொளுத்தப்படுகிறது. உலகில் அதிகளவில் பட்டாசுகள் கொளுத்தப்படும் நாளாகவும் குறித்த நாள் கருதப்படுகிறது. இருந்தும் பாதுகாப்பு மற்றும் வளி மாசடைதலைக் கருத்தில் கொண்டு சீனாவின் 500 இற்கும் அதிகமான நகரங்களில் இதனைத் தடை செய்துள்ளனர். இருந்தும் மக்களால் அவை கருதப்படுவதில்லை. குறிப்பாக பீஜிங் நகரானது 13 வருடங்களாக தடையில் இருந்து மக்களின் எதிர்பால் 2006 ம் ஆண்டில் அத்தடையானது நீக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நாளில் நீங்கள் சீனாவில் இருப்பீர்களானால் குறைந்தது 3 நாட்களாவது பட்டாசின் வண்ண ஒளியைக் காணக் கூடியதாக இருக்கும்.

பட்டாசுகள்

உலகின் அதிக நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை எனக் கருதப்படும் சீனப் புத்தாண்டானது அதிகளவு மக்கள் புலம் பெயர்வை ஏற்படுத்தும் பண்டிகையாகவும் கருதப்படுகிறது. சீன மக்கள் வாழும் பிற நாடுகளான கொரியா,மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து பல லட்சம் மக்கள் இப் பண்டிகைக்காக சீன செல்வதாகவும் அது பல குடும்பங்கள் வருடத்திக்கு ஒருமுறை ஒன்றினைந்து கொண்டாடும் ஓர் முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது. அதிலும் இங்கு மக்கள் பிரயானங்களின் நிமிர்த்தம்  60 நாட்கள் முன்பாகவே புகையிரதங்களை முன்பதிவு செய்வதுடன் ஒவொரு சில நிமிடங்களிலும்  1000க் கணக்கான விமானச் சீட்டுக்கள் விற்பனையாவதும் இவ் விழா மிக முக்கியமானது என காட்டுகிறது.

குடும்பங்கள் இவ் விழாவின் முக்கியமான அம்சமாக  கருதப்படுவதால் சிலர் தம் வீடுகளில் பொய்யாக தன் காதலன் காதலி என வீடுகளில் அறிமுகம் செய்து வைபதனால் அதிஷ்டம் கிடக்கும் எனும் நம்பிக்கையும் நிலவுகிறது. இருந்தும் தடை செய்யப்படும் பழக்கங்களாக குப்பைகளை வெளியே கொட்டுவது அதிஷ்டத்தை இழப்பதாகவும் நம்பப்படுகிறது. மேலும் சவரம் செய்து கொள்வது, கூரான உபகரணங்களான கத்தரிக்கோல், கத்தி போன்றவற்றைப் பயன்படுத்துவது, பொருட்கள் உடைவது, சண்டை போட்டுக் கொள்வது, அமங்கல வார்த்தைகள் (இறப்பு, நோய்) பயன்படுத்துவது என்பன அதிஷ்டத்தை இலக்கச் செய்யும் எனவும் கருதப்படுகிறது.

Dumpling

சிவப்பு நிறம் அதிஷ்டமான நிறமாக கருதப்படுகிறது. வீடுகள் சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப் படுவதுடன் சிவப்பு நிறத்தில் பறக்கும் விளக்குகளை மக்கள் உருவாக்குவக்கி பறக்க விடவது சிறப்பம்சமாகும். இன் நாட்களில் சிறுவர்களுக்கு சிவப்பு நிற கடிதவுறைகளில் பணம் அன்பளிப்பும் செய்யப்படுகிறது. உணவு வகைகளில் சிறப்பாக வைன் (Wine) சேர்த்துக் கொள்ளப்படுவதுடன் இந்  நாட்களில் சிறப்புனவாக dumpling எனப்படும் உணவு கட்டயமானதாக இருக்கிறது மேலும் rice cakes, sponge cake, muffins போன்றனவும் இந் நாட்களின் சிறப்புனவுகளாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் 12 மிருகங்களை சுழற்சி முறையில் அடிப்படையாக கொண்டு இப்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் நாய் மிருகத்தில் பிறந்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. நாம் பிறக்கும் வருடத்தில் அம் மிருகத்தை அடிப்படியாகக் கொண்டு நம் குணாதிசியங்கள் அமையும் எனவும் நம்பப்படுகிறது. நீங்கள் என்ன மிருகத்தினை அடிப்படியாக கொண்டவர்களான அறிந்து கொள்ளுங்கள்….

Leave your comment
Comment
Name
Email