சினிமா எப்படி இருக்க வேண்டும்?

சினிமா, மனிதன் பொழுபோக்குவதற்காக  உருவாக்கபட்ட ஓன்று. ஆனால் இன்று நடிகர்களுக்காக திரைப்படம்  பார்க்கும் நிலை உருவாகி உள்ளது. உண்மையில் எல்லா படங்களுக்கும் எங்கோ ஒரு மூலையில் அதனை ரசிக்கும் ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்யும் ஆனால் எல்லாரையும் திருப்தி படுத்துகிற திரைப்படங்கள் தற்காலங்களில் வருவது அரிதாகவே உள்ளது. என்னை பொறுத்த வரையில் நடிகர்களுக்காக படங்கள் என்ற நிலை போய் படங்களுக்காக நடிகர்கள் என்ற நிலை வர வேண்டும் .

நானும் ஒரு தல ரசிகன். அவருக்காக படம் பார்க்க போய் வெறுப்படைந்த சந்தர்ப்பங்களும் உண்டு. சாதாரணமாக ஒரு சினிமா பார்த்து ஆச்சரியம் அடைந்த சந்தர்ப்பங்களும் உண்டு. சில படங்கள் பார்க்கையில் அநியாயமாக பணத்தையும் மனித உழைப்பையும் வீண் அடிக்கின்றார்களே எனத் தோன்றும். சில வேளைகளில் பிரமிப்பின் உச்சத்தையும் தொட்ட சந்தர்ப்பங்கள் உண்டு.

cinema_ticket

முதலில் ஒரு சினிமா என்ன என்ன விஷயங்களை கொண்டு இருக்கலாம் என்பதை நோக்கினால் சினிமா விஷயங்கள் எத்தனையோ உண்டு. எல்லாவற்றையும் ஒரு படத்தினுள் அடக்க வேண்டும் என்பதில்லை. ஒரு படத்தில் முக்கியமாக இருக்கவேண்டியவை கதை, திரைக்கதை, நடிகர்களினது நடிப்பு திறமை. கதை இல்லாத சினிமாக்கள் கூட திரைக்கதை நன்றாக அமையப்பெற்று நன்றாக இருக்கும். முக்கியமாக கதாநாயகி, இன்று வருகின்ற படங்களில் பெரும்பாலும் பாட்டுக்களுக்கு நடனமாட மட்டும் கதைக்குள் உட்புகுத்தபடுகின்றது. கதைக்கு தேவை இல்லை எனில் அந்த பாத்திரம் இல்லாமல் கூட  படம் எடுக்கலாம். ஒரு ஐந்து பாட்டுக்கள் இரண்டு சண்டை காட்சி கதாநாயகி நகைச்சுவை நடிகன் என உட்புகுதல் கதையின்  நேர்த்தியை குலைக்க கூடும்.  

ஒரு கதைக்கு தேவையான விடயங்களை முதலில் தேர்ந்தெடுத்தாலே பாதி வெற்றி என்று சொல்லலாம். அடுத்து நடிகர்கள் தேர்வு கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தெரிந்தவர்கள் என்பதற்காக  வீணே கதாபாத்திரங்களை உட்புகுத்த கூடாது.

உதாரணமாக கபாலி.

கதை, படத்திற்கு உயிர் நாடி. ஒரு நல்ல கதை நல்ல திரைப்படத்தை உருவாக்க உதவும். திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல பயன் படுத்த முடியும். உதாரணமாக வேலைக்காரன்,

கதை இல்லாமல் நகைச்சுவை, பயம் ,Animations என வேறு நோக்கங்களுக்காகவும் படம் உருவாக்க படலாம். ஒரு சிறந்த படம் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என விவரிப்பது கடிது. இயக்குனர் இன் சிந்திக்கும் ஆற்றல்க்கு ஏற்ப வேறு படும். இலகுவாக சொல்ல போனால் ஒரு படம் பார்த்த பின் உங்கள் மனதில் ஏதோ ஒரு மாற்றம் உண்டாகுமானால் அது ஒரு சிறந்த படம். ஆனால் இன்று பெரும்பாலான படங்கள் பார்க்கையில் எப்போது முடியும் என்பது போல இருக்கும்.

cinema_exite

ஒரு சினிமாவின் வெற்றி பார்வையாளர்கள் அதனை அங்கீகரிக்கும்போது கிடைகின்றது. என்னை பொறுத்த வரையில் நான் திரைகதைக்கே முக்கியத்துவம் கொடுப்பேன். திரைக்கதையே பார்வையாளனை முழு நேரமும் பார்க்க தூண்டுகின்றது. முதலிலேயே குறிப்பிட்டது போல சாதாரண கதை அல்லது கதையே இல்லாமல் ஒரு நல்ல படத்தை நல்ல திரைக்கதை உருவாக்கும். உதாரணமாக விக்ரம் வேதா. சாதாரண கதை, ஆனால் திரைக்கதை அபாரம்.

படம் பார்கையில் அடுத்த scene என்ன என்பதை பார்வையாளன் ஊகிக்க முடியாதவாறு படம் அமைய வேண்டும். Hollywood Movies நிறைய அவ்வாறு அமைந்திருக்கும்.

அடுத்து மற்ற விஷயங்களை நோக்கினால் பாடல் காட்சிகள். பின்னணி இசை இவை கதையோடு ஒத்து சினிமாவை ரசிக்க வைக்க வேண்டும். கதையை முழுமையாக உள்வாங்க பின்னணி இசை பெரும் பங்கு வகிக்கும்.  பாடல் காட்சிகளும் அவ்வாறே. வலிய உட்புகுத்தல்களாக அமைய கூடாது. ஒரு இசையை கேட்கும் போது இது இந்த Scene க்கு வந்த இசை என ஞாபக படுத்த முடிந்தால் இசை அமைப்பாளனின் வெற்றி. ஒரு படம் வெற்றி பெற பலரது உழைப்பு தேவை படுகின்றது. அனைத்தும் சேர்ந்து உருவாகும் படம் ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கும்.

cinema_watching

மிக முக்கியமா விடயம் பிரமாண்டமாக படம் எடுத்தால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்று இல்லை. Bahubali போல உள்ள படங்களுக்கு அது அத்தியாவசியம். சாதாரணமாக Low Budjet இல் எடுக்கப்படும் படங்கள் கூட நல்ல வசூல் தரும்.

சுருக்கமாக சொல்லப்போனால் திரைப்படம் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று சொல்வது கடினம். ஒரு சினிமாவை பார்த்து விமர்சிப்பதும் இலகு நல்ல திரைப்படம் உருவாக பல காலம் பலரது உழைப்பு பலரது கனவு என நிறைய தேவைப் படும். நல்ல ஒரு குழு அமையபெற்று அவர்கள் சொல்ல நினைத்ததை பார்வையாளனிடம் கொண்டு சேர்த்தால் அதுவே போதுமானது……!   

சினிமாவில் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதாவது நினைக்கின்றீகளா? உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே…!!!

Leave your comment
Comment
Name
Email