Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்!!!

பாரிய அளவில் தகவல்களை அறிவதற்கு இணையம் ஒரு பெரிய உதவியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மையில் நிலத்தடி வலைத்தளங்கள் (Underground Websites) மற்றும் நம்மால் காண முடியாத  உள்ளடக்கங்களின் மிகப்பெரிய சங்கிலியில் குறித்த ஒரு இணைப்பு மட்டுமே நம் பாவனையில் உள்ளது. இதன் வரையறையற்ற திறந்த பகுதி Dark Web என வரையறுக்க முடியும், இது பலரது பார்வையில் இருந்து மறைக்கப்பட்ட இணையத்தின்  ஒரு பகுதியாக உள்ளது.

Dark Web என்றால்  என்ன?

Word Wide Web  உள்ளடக்கத்தில் 4% மட்டுமே நாங்கள் உலா வருகிறோம். இது “தெரிந்த வலை” (Visible Web) என்றும் அழைக்கப்படுகிறது, இது அரசாங்கத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பைப் பயன்படுத்தி நம்மால் பயன்படுத்தக்கூடிய  உள்ளடக்கமாகும். “இருண்ட இணையம்” என்று அறியப்படும் Dark Web, ஒப்பீட்டளவில் WWW உள்ளடக்கத்தின் 96% இனை கொண்டுள்ளது. இது தேடுபொறிகள் மூலம் குறியிடப்படாத உள்ளடக்கமாகும். அது அரசினால் கண்காணிக்க மிகக் கடினமாக உள்ள பகுதியாகும். இது மேற்பரப்பு வலையின் அளவைக் காட்டிலும் 500 மடங்கு பரவலான பகுதியைக் கொண்டதென மதிப்பிடப்பட்டுள்ளது.


what-is-the-dark-web

Dark Web இனை அணுகுவது எப்படி? இருண்ட இணையப் பகுதியை அணுக, நீங்கள் ஒரு பிரத்யேக உலாவி பயன்படுத்த வேண்டும், TOR (TheOnionRouter) மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் பிரபல்யமான இணைய உலாவியாகும். இதனை விட I2P மற்றும் Freenet போன்ற பிற விருப்பங்களும் இதற்கு ஒரு மாற்று தீர்வை வழங்குகின்றன. நாம் மேற்பரப்பு வலைகளைப் பயன்படுத்தும் போது, ​​மூலத்திலிருந்து நேரடியாக பெறப்பட்ட தரவுகளை மட்டும் அணுக வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நேரடி அணுகுமுறையானது பதிவிறக்கம் மற்றும், எப்போது அணுகப்பட்டது, மற்றும் உங்கள் சரியான இருப்பிடம் போன்றவற்றை  HTTP நெறிமுறையைப் பயன்படுத்தி கண்காணித்து தகவலை சேகரிக்கும், ஆனால் ஆழமான வலை பற்றிய தகவல்களை நேரடியாக அணுக முடியாது. ஏனென்றால் தரவு இறக்கமானது எந்த ஒரு ஒற்றை பக்கத்திலும் (Web Page) நடைபெறுவதில்லை, மாறாக தரவுத்தளத்தில் (Data Base) நடைபெறுகிறது. இதனால்  குறியீடுகளை கொண்டு  சாதாரண தேடுபொறிகளில் தேடுவது கடினமாகிறது. சாதாரணமாக தேவையான  தகவல்களை  வைத்திருக்கும் இணையத்துடன் இணைக்கப்பட்ட எந்தவொரு கணினிகளிலும் எல்லா கோப்புகளும் பகிரப்படும். இது Peer-to-peer Networking என்று அழைக்கப்படுகிறது. இங்கு மறைகுறியாக்கப்பட்ட (encrypted data) தரவைப் பகிர்ந்து கொள்ளும் முறை பயன்படுத்தப்படுவதால் உங்கள் இருப்பிடத்தையோ, நீங்கள் அணுகக்கூடிய தகவல்கள் கண்காணிக்கப்படுவதோ கடினமாக்குகிறது.


tor-browser

Dark Web சட்டபூர்வமானதா?

TOR செயலியின் மறைக்கப்பட்ட தரவு வழங்கல் செயல்பாட்டினால், Dark Web ஆனது போதை மருந்துகள், சட்டவிரோதமான ஆபாசம், ஆயுத வர்த்தகம், வாடகை கொளலையாளிகள் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளுக்கான ஒரு பிரபலமான இடமாக உள்ளது. இதனை பயன்படுத்துவதன் மூலம் குறித்த சேவையை வழங்குவதாக கூறும் குழுக்கள் உள்ள போதும், அவர்களின் இருப்புக்கான சட்டபூர்வ ஆதாரமும் இல்லாதிருப்பது Dark Web இனை அச்சுறுத்தலான பகுதியாக்கிறது . நீங்கள் வேறு எந்த இணைய உலாவியிலாவது அதைப் பயன்படுத்த கோரும் போதும் அதற்க்கு அரசினால் தன்னிச்சையாக தடை விதிக்கப்படும். இருந்த போதும் இராணுவம், பொலிஸ் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் இப்போது TOR ஐ பயன்படுத்துவதன் மூலம் தங்கள் தனியுரிமையை பராமரிப்பதற்கான வழிமுறையாகப் இதனை கருத  ஆரம்பித்துள்ளனர்.


dark-web

Dark Web இல் BitCoin இன் பங்களிப்பு

Dark Web இல்  Silk Road ஒரு பிரபலமான வலைத்தளம் ஆக கருதப்படுகிறது. இங்கு சட்ட விரோதமான விடயங்களை வாங்கவும் விற்கவும் முடிவதுடன், குறிப்பாக சட்டவிரோத போதை  மருந்துகள் விற்றக்கப்படுவதனால்  “Ebay of Drugs” எனவும்  அறியப்படுகிறது. இது முழுக்க முழுக்க Bitcoin இன்  பயன்பாட்டினால் சாத்தியமானது.  Bitcoin என்பது மெய்நிகர் (Virtual) நாணயமாகும், இது மறைகுறியாக்கப்பட்ட Peer to Peer முறையை கணினிகளிடையே  பயன்படுத்துகிறது. Bitcoin ஆனது பயனர்களை வணிக நடவடிக்கைகளை சட்டவிரோதமாக நடத்த அனுமதிக்கிறது. இன் நாணயமானது இலகுவாக ஒரே மின் நாணய அலகினை பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்டாலும்    சில பயனர்களை சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கு தூண்டுகோலாகவும் அமைகிறது.

Dark Web ஆனது ஒரு கூர்மையான கத்தி போல எல்லாவற்றையும் நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்களோ அதைப் பொறுத்து எதிர் விளைவுகளையும் தருகிறது, எனவே விதிமுறைகளின் கீழ் பாதுகாப்பான இனைய தள பாவனயினை மேற்கொள்வது அனாவசியமான தொந்தரவுகளை தவிர்துக்கொள்ள வழியாகும்.

Dark Web பற்றிய உங்கள் கருத்துக்களை Comment box இல் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave your comment
Comment
Name
Email