Backup செய்து தரவுகளை சேமிப்பது எப்படி?

சில நாட்களின் முன் என் மடிக்கணணி முற்றாக செயலற்றப் போன சந்தர்பத்தில் என் தரவுகள் என் மடிக்கணணியில் மட்டுமே சேமிக்கப்படிருந்த்து. வேறு எந்த கணனியின் உதவியாலும் என் வேலைகளை செய்ய முடியாமல் கஷ்டபட்ட தருணங்களை எண்ணிப் பார்க்கிறேன். நீங்களும் திரும்பப்பெற முடியாத தரவுகள் பலவற்றை தொலைத்திருக்கலாம். அவை தொலைந்த பின்னர் மீளப்பெற “Recovery Software” ஐ தேடி அலைவதை விட முக்கியமான தரவுகளை முன்கூட்டியே பாதுகாப்பாக Backup செய்து வைத்துக்கொள்ளலாமே, அவ்வாறு பாதுகாக்க சில வழிகள்.

Quick Save செய்தல், புதுமையான விடயம் ஒன்றும் இல்லை. இன்றே இப்பொழுதே மிக முக்கியமான பதிவுகளை USB Drive இன் உதவியுடன் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். USB Drive ஆனது ஏதுவான விலையில் அனைவராலும் வாங்கக்கூடிய வகையில் சந்தையில் கிடைக்கிறது. கணனியின் வன்தட்டில் இருந்து தரவுகள் அழிக்கப்படும் போதோ அல்லது திருடப்படும் போதோ அவற்றை மீளப்பெற மிகச் சிறந்த வழியாக Backup அமையும். இதனை செய்வதற்கு அதிகூடிட தொழில் நுட்ப அறிவும் தேவையில்லை.


fast-flash-drive

தரவுகளை backup செய்ய முன் ஒரு தரவானது அழிக்கப்படும் போது அதை மீளப் பெற வேண்டிய தேவை இருக்குமா என அறிந்து கொள்ளவேண்டும். உதாரணமாக வங்கிக்கணக்கு, செயற்திட்ட தகவல்கள் போன்றவை கட்டாயமாக சேமித்து வைக்கவேண்டிய வகையானவை. சில தரவுகள் இன்று தேவை என எண்ணா விட்டாலும் 10 வருடங்களின் பின் பெறுமதியானவையாக இருக்கலாம். உதாரணமாக நம் புகைப்படங்கள், சில வருடங்களின் பின் நம் நினைவுகளை மீட்டிப்பார்க்க பேருதவியாக இருக்கும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த திரைப்படங்கள், MP3 இசை போன்றவற்றை Backup செய்வதை தவர்த்துக்கொள்வது நல்லது ஏனெனில் அவை கிடைப்பதற்கு அரிதானவை அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களின் உதவியுடன் தரவுகளைப் பாதுகாக்க எதுவாக வழிகள் இருக்கின்றது இருப்பினும் அவை எவ்வளவு நிரந்தரமானவை  என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. உங்கள் கணக்கு முடக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவற்றை இலகுவாக மீளப்பெற முடியுமான வலைத்தளங்களை மட்டும் பாவிப்பது சிறந்தது. சிலர் தம் கணக்குகளை ஆரம்பிக்கும் போது AutoSave செய்யப்படும் கடவுச்சொல்லை மட்டும் நம்பியே வாழ்கின்றனர். அவை பின்னாளில் அழிக்கப்படும் போது தரவுகளை முற்றாக இழந்து நிற்கும் நிலையே ஏற்படும் எனவே கடவுச்சொற்களையும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அத்துடன் இணையத்தில் தரவுகள் சேர்க்கப்பட்லாலும் அதற்கான மாற்றீடாக ஒரு பிரதி வைத்திருப்பது சிறப்பானது.


external-drive

USB Drive மூலம் தரவுகளை சேமிக்க தொடங்கியவர்கள் இப்பொழுது தரவுகளை பிரித்தாளும் முறைகளை அறிந்திருப்பீர்கள். மிக முக்கியமான தரவுகளை அறிந்து அவற்றை சேமிக்கும் போது போதுமான இடம் இல்லாது போகும் சந்தர்ப்பம் ஏற்படும் நிலையில் வன்தட்டு (Hard Disk) இன் உதவியுடன் தரவுகளை சேமிக்கலாம். இப்பொழுது கொண்டுசெல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட (Portable) வன்தட்டுக்கள் பிரபலமானவை. அவற்றைக் கொள்வனவு செய்யும் போது வன்தட்டின் கொள்வனவிற்கு ஏற்ப விலையானது சற்றே மாறுபடும், அவற்றை அறிந்து கொள்வனவு செய்வது எதிகாலத்தில் கூடிய தரவுகளை சேமிக்க உதவியாக இருக்கும்.

இவற்றையும் தாண்டி தொடர்ச்சியாக தரவுகளை சேமிக்க எண்ணுபவர்கள் Cloud சேவைகளைப் பயன்படுத்தலாம். இவற்றில் தன்னியக்கமாக தரவுகளை சேமிக்கும் வசதிகளை செய்யக்கூடியதாக இருக்கிறது. தடைசெய்யப்பட்ட்ட அல்லது நம்பிக்கையற்ற சேவைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நம்பிக்கையான Microsoft OneDrive, Google Drive, Dropbox என பரவலாக நன்கறிந்த இடங்களில் தரவுகளை சேமிக்கும் பொது தரவுகள் தற்செயலாக அழியும் வாய்ப்புக்கள் குறைவானது. இவை குறித்த அளவிலான சேமிப்பிடத்தை வழங்கினாலும் தனி நபர் தேவைகளுக்கு போதுமானதாகவே இருக்கிறது. குறித்த சிறு தொகையை மட்டும் செலுத்தி சேமிப்பிடத்தின் அளவையும் அதிகரித்துக்கொள்ளலாம்.


backup-drives

தொழில்நுட்ப வளர்ச்சியால் தரவுகளின் தரமாது அதிகரிக்கும் போது அதனை சேமிக்கும் இடத்தின் அளவும் அதிகரிக்கிறது. முன்பு சாதரணமாக 1GB அல்லது 2GB நினைவகத்தைப் பெரும் விலையில் இன்று 64GB, 128 GB USB நினைவகங்களைப் பெற முடிகிறது. கணனியில் தரவுகள் தேங்கும் நிலையுடன் இன்று கைபேசிகளின் நினைவகங்களும் நிரம்பி வழிகின்றன. எனவே தரவுகளை பாதுகாப்பாக  வைத்திருக்கவவும் வேறு இடத்தில் சேமிப்பதன மூல வேகமாக நம் கணணி மற்றும் கைபேசிகளை இயக்கச் செய்யவும் வாரம் ஒருமுறையோ அல்லது குறைந்த பட்சம் மாதம் ஒருமுறையோ Backup செய்யுங்கள். வீணாக உங்கள் தரவுகளை இழக்க நீங்களே காரணமாகாதீர்கள்….

Leave your comment
Comment
Name
Email