இறந்த பின்னும் உலகை பார்க்க வேண்டுமா?

இறந்த பின்னும் உலகை பார்க்க வேண்டுமா? கண்தானம் செய்யுங்கள். உலகிற் பிறந்த மனிதர்கள் எல்லோரும் இறப்பது இந்த உலகின் நியதி ஆகும். அம்மனிதர்களிற் பூரணமிக்க மனிதர்களாக வாழ்ந்த மனிதர்கள் எவருமே இல்லை. ஒவ்வொரு மனிதனும் எந்த ஒரு வகையிலோ ஊமையாகவே இருக்கிறான். அவ்வாறு ஊமையனானவர்களிற் கண்பார்வையற்றவர்களும் ஒரு வகையினர். இவர்கள் பிறக்கும் போதோ அல்லது வாழ்க்கை பாதையிலோ கண் பார்வையை இழந்திருக்கலாம். இது மருத்துவ உலகிற்கு பெரும் சவாலாக உள்ளது. உலகில் நாளுக்கு நாள் பல்வேறு பகுதிகளிற் பல்வேறு காரணங்களால் கண்பார்வை இழக்கப்படுகிறது. பிறக்கும் போதே கண்பார்வையற்ற குழந்தைகள் (Visually handi capped Children) பிறக்கின்றன. இவை பெரும் மருத்துவ ஆராய்ச்சிகளிற்கும் சத்திரசிகிச்சைகளிற்கும் இட்டுச் செல்கின்றன. இவற்றிற்கு தீர்வாக இன்று உலகம் பூராகவும் பின்பற்றப்படும் ஒரு சிகிச்சை முறைதான் ” கண்மாற்று சத்திரசிகிச்சை முறை” (Corneal Transplant).

பிறர் வாழ்வில் ஒளியேற்றி உலகின் மகிமையை உணரவைக்கும் இந்த உன்னத சிகிச்சைக்கு ஊன்றுகோலாக இருப்பது கண்தானம். இறப்பின் பின்பும் உலகின் ஒளியை உணர்வதற்கு இவ் உன்னத பணி உதவுகிறது.


Eye-Donation

யார் செய்வது? நல்ல மனநிலையிலுள்ள 10 வயதை கடந்த எந்தவொரு மனிதனும் கண்தானம் செய்யமுடியும். மூக்கு கண்ணாடி பாவிப்போர், நீரிழிவு நோயாளர், உயர் குருதியமுக்கம் உள்ளோர்(Hypertension), ஆஸ்துமா நோயாளர்கள், வயது முதிந்தோர் ஆகியோரும் மேற்கொள்ளமுடியும். விழித்திரை அல்லது பார்வை நரம்பு(optic nerve) போன்றவற்றின் பாதிப்பினாற் கண்பார்வையை இழந்தவர்கள் கூட கண்களைத் தானம் செய்யமுடியும்.

எவ்வாறு செய்வது? மிக நீண்ட தூர நோக்குடையவர்கள், உண்மையில் விருப்பமுடையவர்கள் இதனைச் செய்வதன் மூலம், இந்த உலகிலே மிகச் சிறந்த பண்புகளின் வெளிப்பாடுகளைக் காண்பிப்பார். இவர்கள் இரண்டு முக்கிய விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும். முதலில் தன்னுடைய சிந்தனையைக் குடும்பத்தினருடன் ஆலோசித்து உறுதியான முடிவுகளை எடுத்தல், பின்பு அருகிலுள்ள கண்தானசபையின் ஊடாக அல்லது கண்வங்கி(Eye bank)யின் ஊடாகவோ கண்தானம் செய்வதற்குரிய படிவத்தை பெற்று பூரண மன சம்மதத்துடன் நிரப்பிப் பதிவுகளை மேற்கொள்ளல். இவற்றை செய்ய தவறின் அல்லது விருப்பம் இருந்தும் வாய்ப்புகள் கிட்டாவிடின் இறப்பின் பின் உறவினரின் உத்தரவின் பேரில் கண்கள் தானமாக பெறப்படும்.


Eyepatient

எப்படி செய்வது? உயிருடன் வாழும் எந்த ஒரு நபரில் இருந்தும் கண்கள் தானமாக பெறப்படாது.இறந்தபின் சரியாக 6 மணித்தியாலங்களுக்குள் கண் சிகிச்சை நிபுணர்களின் உதவியுடன் கண்கள் தானமாக பெறப்படும்.

எப்பகுதி? கண் தானத்தின்போது, கண்விழியின் விழிவெண்படலம்(cornea) பகுதியே பெறப்படும். இப்பகுதியே கண்மாற்று சத்திர சிகிச்சையிற் பெறப்படும். இப்பகுதியானது கண்களின் கறுப்பு பகுதிக்கு முன்னால் உள்ள ஒளிபுகவிடும் தன்மையுள்ள தெளிவான பகுதியாகும். இது பொருளில் இருந்து வரும் ஒளிக்கதிர்களை விழித்திரையை நோக்கி குவிப்பதற்கு உதவுகிறது. இப்பகுதி ஒளிபுகவிடும் தன்மையை இழப்பின் பார்வை இழக்கப்படும். விழிவெண்படலம் ஒளியை இழப்பதற்கான காரணங்களாக நுண்ணங்கி தொற்று, காயம், குறை போசாக்கு, சத்திரசிகிச்சையின் பின்பு கவனிப்பின்மை, பாரம்பரியம் என்பன அமைகின்றன.


Sclera

செய்ய முடியாதவர்கள்? இறப்பிற்கான காரணம் தெரியாமல் இருப்பின் நோய்த்தொற்று, நீர்வெறுப்புநோய், சிபிலிஸ்(sibilis), ஈரல் புற்றுநோய்(hyparitis), எயிட்ஸ்(Aids) போன்றவற்றால் பாதிக்கப்படட அல்லது இறந்த மனிதர்களும் இப்பணியை செய்யமுடியாது.

பாரம்பரியத்தின் செல்வாக்கு? இங்கு எவ்வித செல்வாக்கும் செலுத்துவதில்லை. விழிவெண்படல மாற்றீடு(corneal transplant) என்பதால் பாரம்பரிய காரணிகள் செல்வாக்கு செலுத்துவதில்லை. பாதிக்கப்பட விழிவெண்படலத்திற்கு பதிலாக நல்ல விழிவெண்படலம் மாற்றப்படும், முழுப்பகுதியையும் தானம் செய்யும் நபரின் ஏனைய பகுதியும் ஆராய்ச்சிகளிற்காகவோ அல்லது மருத்துவ கற்கைகளுக்காகவோ பயன்படுத்தப்படும். ஒளி கொடுக்கும் உன்னத பணி என்பதால் இனம், மதம், மொழி, என்பதற்கு அப்பாற்பட்டது.


Corneal-Transplant

முக்கிய கவனத்திற்கு! பார்வை பரிசு என்பது மிகவும் உன்னதமானது. இதனால் கண்தானம் செய்தவரை பற்றி கண்களை தானமாக பெறுபவருக்கு கூறப்படாது. அத்துடன் யாருக்கு கண்கள் தானம் செய்யப்படவேண்டும் என்பதை கண்வங்கியே தீர்மானிக்கும்.

அத்துடன் எந்தவொரு கூலியோ அல்லது பணமோ கண்தானம் செய்பவரின் உறவினர்களுக்கு வழங்கப்படமாட்டாது. தானம் செய்தவரின் மரண சடங்கில் திறந்த நிலையில் உள்ள பிரேத பெட்டிகளை பயன்படுத்த முடியும். கண்கள் அகற்றப்படுவதன் மூலம் பிரேதத்தில் மாற்றம் எதுவும் ஏற்படுத்தப்படமாட்டாது.

சேமிக்கப்படும் முறை சில தினங்கள் தானமாக பெறப்பட்ட இவ் விழிவெண்படலம் கண் வங்கியின் இழைய வங்கியில் சேமிக்கப்படும். விழிவெண்படலம் அன்றோ அல்லது அடுத்த நாளோ பாதிக்கப்பட்டுவிடும். பாதிக்கப்பட்ட இழையங்கள் சடடரீதியாக அழிக்கப்பட்டுவிடும்.


கண்நோய்கள்

கண்தானத்தின் அவசியம் பல்வேறு கண்நோய்கள் பல பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளன. பிரதானமாக விழிவெண்படல பகுதி பாதிப்பதனால் இன்று நம்முள் பலர் அவதிபடுகின்றோம். அப்பாதிப்பை நிவர்த்தி செய்ய கண்தானம் அவசியமாகும். பிறப்பிலேயே கண்பார்வையற்றவர்காளாக இருக்கும் பலருக்கு ஒளிபுகவிடும் தன்மையற்ற விழிவெண்படலம் காரணமாக அமைகிறது. அதனை நிவர்த்தி செய்ய இக் கண்தானம் உதவுகிறது.

கண்தானம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் பதிவிடவும்…..
Leave your comment
Comment
Name
Email