அனைவருக்குமே நன்கு அழகாகவும்,வெள்ளையாகவும் மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஏனெனில் உள்ளவர்கள் அக அழகை பார்ப்பதில்லை புற அழகை வைத்து தான் ஒருவரை எடை போடுகிறார்கள். எனவே அக அழகுடன், புற அழகையும் மனதில் கொண்டு அதனை சரியாக பராமரித்து வரவேண்டும். வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கறுப்பாவது வழமை. எனவே மற்றவர்களுக்குத் தெரியாமல் எங்கள் கறுப்பு முகத்தை களையாக மாற்ற முயற்சித்துக் கொண்டு தான் இருப்போம். அதற்காக கடைகளில் விற்கும் அழகுப் பொருட்களை வாங்கி உபயோகித்து எந்த பலனும் இல்லை. பணத்தை செலவழித்து, chemical கலந்த அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, இயற்கை முறைகளை பின்பற்றினால் சருமம் அழகாக இருப்பதுடன் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இயற்கை முறைகள் பயன்படுத்துவதால் கிடைக்கும் தீர்வுகள் நிரந்தமானதாக இருக்கும்.
சருமம் கறுப்பாக மாறக்கூடாதெனில், ஒருசில செயல்களை தினமும் செய்து வரவேண்டும். அவையாவன முகத்தை கழுவுதல், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சிகளை பின்பற்றுதல், நிறைய தண்ணீர் குடித்தல் என்பனவாகும்.
முகத்தை கழுவுதல்- தினமும் முகத்தைக் கழுவுவது என்பது முக்கியமான ஒன்று.முகத்தில் தூசிகள் படிந்திருப்பதால், முகம் பொலிவின்றி காணப்படும், பொலிவோடு இருக்க வேண்டுமெனில் அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவ வேண்டும். அவ்வாறு கழுவி வந்தால் முகம் நன்கு சுத்தமாக பருக்களின்றி இருக்கும்.
எலுமிச்சை – எலுமிச்சை ஒரு சிறந்த Bleaching பொருள். இத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல்லது சாற்றைக் கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும். எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் C, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்..
பழங்கள் – பழங்களில் வாழைப்பழம், பப்பாளி போன்றவை சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடியவை. எனவே இத்தகைய பழங்களை சாப்பிடுவதோடு, சருமத்திற்கு தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
சூரியக்கதிர்களின் தாக்கத்தை தவிர்க்கவும் – சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால், சருமத்திற்கு கடுமையான பாதிப்பானது ஏற்படுவதோடு, சருமத்தின் நிறமும் மாறும். எனவே சருமம் வெள்ளையாகவும், நிறம் மாறாமலும் இருப்பதற்கு, வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும். அப்படியே வெயிலில் செல்வதென்றால் வீட்டிற்கு வந்ததும் சருமத்தை சுத்தமான நீரினால் கழுவிட வேண்டும்.
தயிர் மசாஜ் – தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் தன்மை கொண்டது .தயிர் முகத்தை வெள்ளையாக்க உதவும் எனவே அதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால் முகப்பொலிவு கிடைக்கும்.
கற்றாளை – கற்றாளை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள் எனவே கற்றாளையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்தால்முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
மஞ்சள் – மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து மாஸ்க் போட்டு வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.
தண்ணீர் குடிக்கவும் – தினமும் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் மின்ன ஆரம்பிக்கும்.ஒரு நாளைக்கு குறைந்தது 9 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம்.
உடற்பயிற்சி – முகத்தில் ஒரு நல்ல பொலிவு வரவேண்டுமெனில், தினமும் காலையில் எழுந்து லேசான உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொண்டால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகத்தில் உள்ள சோர்வு நீங்கி, இயற்கையாகவே முகம் அழகாக இருக்கும்.
தக்காளி – தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துகொள்ளும். புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது. பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும். பாதிப்படைந்த செல்களை புதுப்பித்து, சருமத்தின் அழகை அதிகரிக்கும்.
Orange – சரும அழகை கூட்டுவதற்கு ஒரு சிறந்த வழி என்றால் ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுவது தான். இல்லை என்றால் orange பழ தோலை அரைத்து முகத்திற்கு மாஸ்க் போடலாம்.
வாழைப்பழம் – வாழைப்பழத்தை நன்கு மசித்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். வாழைப்பழத்திற்கும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதற்கு வாரத்தில் ஒரு முறை நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் 1 spoon புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி வர வேண்டும்.
ப்ரஷ் ஜூஸ் குடிக்கவும் – தினமும் குறைந்தது 2 பெரிய டம்ளர் அளவில் பழங்களால் ஆன ஜூஸை குடிக்க வேண்டும். இதனால் சருமத்திற்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்து, சருமம் அழகாக வெளிப்படும்.
Rose water – இதில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.
சரியான தூக்கம் – தினமும் சரியாக தூங்குவதில்லையா? அப்படியெனில் அது முக அழகை கெடுக்கும். எனவே தவறாமல் தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் கருவளையங்கள் நீங்கி, முகம் இயற்கையான அழகுடன் தோற்றமளிக்கும்.
மாம்பழத் தோல் – மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.
தேன் – தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும்.
குங்குமப்பூ – குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும். அதிலும் இந்த செயலை தினமும் ஒருவர் பின்பற்றினால், சீக்கிரம் வெள்ளையாவதைக் காணலாம்.
முட்டை – முட்டையில் புரோட்டீன் , சருமத்திற்கு அழகைக் கொடுக்கும் சில வைட்டமின்களும் நிறைந்துள்ளன. எனவே முட்டையை உணவில் அதிகம் சேர்ப்பதோடுமுட்டையின் வெள்ளைக்கருவை வாரத்திற்கு 2 முறை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ, சருமத்தில் உள்ள அழுக்குகள், கருமைகள் முழுமையாக நீங்கி, முகம் பொலிவோடும், வெள்ளையாகவும் தோன்றும்.
Sun Glass – அணியவும் சூரியனிடமிருந்து வெளிவரும் கதிர்கள் மிகவும் ஆபத்தானவை. அவை கண்களைச் சுற்ற கருவளையங்களை ஏற்படுத்திவிடும். மேலும் சரும சுருக்கங்களையும் உண்டாக்கிவிடும். ஆகவே எப்போதும் வெளியே செல்லும் போது மறக்காமல், Sun Glass அணிந்து செல்வது நல்லது.
கடலை மாவு – கடலை மாவில் மோர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், சருமத்தின் நிறத்தில் அதிரடி மாற்றம் ஏட்படுவதை காணலாம்.கடலை மாவை மட்டும் கூட பயன்படுத்தலாம்.
சந்தனம் – சந்தனப் பொடியை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதை நன்கு காணலாம். மேலும் முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும். சந்தனத்தில் உள்ள உட்பொருட்கள், முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும். சந்தன பொடியை பால் அல்லது நீரில் கலந்து தினமும் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவி வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.
முகத்தை வெள்ளை ஆக்குவதட்கு இந்த காலத்தில் Editing APP பயன்படுத்தாத இளைஜர்களே இல்லை எனலாம், அதனை பயன்படுத்தி புகைப்படங்களை மட்டுமே வெள்ளையாக்க முடியும். ஆனால் இங்கே காணப்படும் குறிப்புகளை பயன்படுத்தி நிரந்தரமாக உங்களால் வெள்ளையாக வர முடியும்.
உங்கள் கருத்துக்களை பதிவிடவும்….