சிறந்த தலைமைத்துவப் பண்புகளை அறிந்து கொள்ளுங்கள்

இன்றைய காலகட்டத்தில் உயர் மட்டப் பதவிகளை வகிக்கிகும் பலர் பெயரளவில் தலைவர்களாகவும் மனதளவில் முதலாளித்துவத்தைக் கடைபிடிபவர்களாககவுமே காணப்படுகின்றனர். பதவிகள் நொடிப் பொழுதில் கிடைத்தாலும் அவை நிரந்தரமற்றவை இருந்தும் ஓர் உண்மையான தலைமையால் கிடைக்கும் பெயரானது உறுதியானது எனலாம். ஓர் சிறந்த தலைவர் பின்பற்றும் பொதுவான சில வழிமுறைகளாக,

தலைவருக்கான சிந்தனை

  • தன் மீதான நம்பிக்கை – செய்யும் வேளைகளில் தன மீதான நம்பிக்கையானது மி அதீத அளவில் இருக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு வேலைகளின் முன்பும் அது பற்றிய தவல்களை முற்றாக கேள்விகளிக் கேட்பதன் மூலம் நன்கறிந்து செயற்படுவர். அவர்களிடமே ஓர் வேலையை முன்னெடுத்து செல்வதற்கான ஆற்றல் காணப்படும்.
தன் மீதான நம்பிக்கை
  • தொழில் இறுக்கமும் இரக்கமும் – தலைமைப் பொறுப்பிலிருக்கும் போது தலைவர்கலாலேயே அதற்கான எல்லைகளும் விதிகளும் தீர்மானிக்கப்படும். சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அதர்க் கேட்ப வேளைகளில் இறுக்கமும் நெகில்சிதன்மையும் தீர்மானிக்கும் குணம் இருக்கும். எடுக்கும் தீர்மானகளில் உறுதித்தன்மை பேணுவதுடன் பிரச்சனைகளில் அதனை தர்க்க ரீதியாகவும் புரிந்து கொண்டும் தீர்க்க வேண்டும்.
  • தொழில் நிபுனராயிருத்தல் – தலைமைப் பொறுப்பிலிருந்து கொண்டு ஒரு தடவை ஒரு வேலையைத் தெரியாது எனச் சொல்வது ஏற்ககக் கூடியதாக இருந்தாலும் அது பல தடவை தெரியாது எனற சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கும். ஒரு விடயம் தெரியாது போகும் சந்தர்பத்தில் அதனை தேடி கண்டறிந்து கொள்வது சிறந்த பண்பாகும். அதனைப் பற்றி ஆழமான அறிவு இல்லது போனாலும் மேலோட்டமாகவாவது அறிந்து வைத்திருத்தல் சிறந்தது.
  • முடிவெடுக்கும் ஆற்றல் – பலர் நிறைந்த சபையில் பெரும்பாலும் தீர்மானம் எடுப்பதில் குழப்ப நிலையே இருக்கும். ஒருவர் மீது ஒருவர் குறை கூறி தமது முடிவுகளை நியாயப்படுத்தவும் செய்வர். இருந்தும் தலைவர் ஒருவரது முடிவானது இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அனைவரது கருத்தையும் ஆராய்ந்து இதுவே இறுதியானது எனக் கூறும் வகையில்லிருக்க வேண்டும்.
  • விசுவாசிகள் மீதான அக்கறை – தலைவர்கள் தம் மீது நம்பிக்கை கொள்ளும் தொண்டர்களின் சேர்க்கையால் உருவாகின்றனர். அவர்கள் மீது அக்கறை கொள்ளும் போது முழுமையான அது தலைமைப் போருபிலுள்ளவர்களின் முட்டாள் தனமாக இருக்காது பதிலாக சுதந்திரம் வழங்கப்படுவதால் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களில் நம்பிக்கை அதிகரிப்பதுடன் அவர்கள் மீது அக்கறை கொள்வதை வெளிப்படுத்துவதால் பினைப்பானது மேலோங்கும்.
co-working

தலைவருக்கான பண்புகள்

வாக்குறிதிகளைக் காப்பாற்றுவது – அரசியலில் தலைவர்கள் வாக்குறிதிகளில் எவ்வாறு விமர்சிக்கப்படுகிறார்கள் என்பது பலரும் அறிந்த ஒன்று அதனால் பலர் வெறுக்கப்படுவதும் உண்டு.  கூறும் வார்த்தைகளில் 90 வீதமானவற்றை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். உங்களிடம் அதனை செய்வதற்கான் ஆற்றலும் அறிவும் உள்ளதெனும் நம்பிக்கையும் வேண்டும். உயர்ந்த ஒழுக்க நெறியின் கீழ் இயங்கும் போது இது சவாலான விடயமாகவும் இருக்கும்.

பொருத்தமான ஆடை தெரிவு – நம் வெளிப்புறத் தோற்றமே பெரும்பாலும் நம்மை மதிப்பிடுகின்றன. எனவே நாம் இயங்கும் தொழிலிட்கும் நம் பதவிக்கும் மரியாதை கிடைக்கும் வகையில் நம் ஆடை அமைப்பு இருக்க வேண்டும். உதாரணமாக கழுத்துப்பட்டி அணிவது  வர்த்தகம் சார்ந்த பதவியிலிருப்போர் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டாக செயல்படல் – செய்யும் வேலையை நமது அணியிளிருப்பவர்கள் விருப்பத்துடன் செயர்ப்படுகிரார்களா என்பதை சரிபார்க்க வேண்டும். அணியிலிருப்பவர்கள் அனைவரையும் புரிந்து கொண்டு செயல்படும் போது செயல்பட வேண்டும். நம்முடனிருப்பவர்களைக் கண்டதும் சிறு புண்ணுக்க கூட உள்ளிருக்கும் விரிசல்களை குறைப்பதாய் அமையும். சிறுவர்களை வேண்டுமானால் ஓர் குறித்த பணியை செய்ய வைக்க ஓர் ஒழுங்கில் அமர்த்த முடியும் அனால் வயது முதிர்சி வேறுபாடு உடையவர்களை ஓர் ஒழுங்கில் வேலை செய்ய வைப்பதே திறமையாகும்.

leader-help-wokers

தலைமைப்பொறுப்பிலிருப்பது இலகுவானதொன்றல்ல அதில் பிரச்சனைகளை அடையாளம் காணவும் அதனை முன் கூட்டியே சிந்தக்கவும் தெரிந்திருத்தல் அவசியம். வாய் சொல்லில் மட்டுமல்லாது செயல் திறனுடனும் செயல்பட வேண்டும். சிறப்பான முடிவுகளை எடுக்கவும் ஏற்படும் விளைவுகளுக்கு பொறுப்பேற்கும் மனோ பக்குவமும் இருக்க வேண்டும். பிறர் முடிவுகளுக்கு செவி சாய்ப்பதும் பொதுவான முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்துவதும் நம் முடிவுகள் பற்றிய எண்ணங்களை பிறரிரம் பகிர்ந்து கொள்ள வேண்டும். தனி மனித சாதனைகளாய் கானது இது ஓர் கூடு முயற்சி என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இப்படி தலைவர்கள் உருவாவதில்லை அனுபவம் மூலம் உருவாககப்படுகிரார்கள் என்பதே உண்மை.

Leave your comment
Comment
Name
Email