வாழ்வில் புதிய அர்த்தங்களைக் கொண்டுவர நம் பிரயானங்கள் உதவுகின்றன. நான்கு சுவருக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கும் வாழ்க்கையை பலர் ஏக மனதாய் ஏற்றுக் கொள்கின்றனர் பழக்கப்பட்டுவிட்டதனால். சில நொடிகளிலேயே அனுபவங்கள், புத்தகங்களால் கற்றுத் தர முடியாத பல விடயங்களை கற்று தனது விடுகின்றன. பறந்து விரிந்த உலகின் அழகை படிப்பதை விட தேடி சென்று ரசிப்பதில் இருக்கும் இன்பதைதை அனுபவிப்பவர்கலாலேயே உணரமுடிகிறது. பொக்கிசமான அந் நினைவுகள் பல வேளைகளில் பாதுகாக்கப்படுவதில்லை அவை காலத்தில் கரையும் நினைவலைகளாயும் மாறிவிடுகின்றன. அவற்றை அழியாது சேமிப்பதற்கு சிறந்த வழி பிரயாணக் குறிப்பேடுகள் (Travel Journal) எனலாம்.
பிரயாண குறிப்பேடுகள் யாருக்கானவை ?
பிரயாணங்களின் ஞாபகங்களை மறக்காதிருக்க நினைபவர்களுக்கும் பலரை கவரும் வகையில் அதை சேமிக்க விரும்புவர்களுக்கும் இது மிகவும் பொருத்தமானது. பலவேளைகளில் பிரயாணங்களில் நாம் எடுக்கும் புகைப்படங்கள் ஞாபகார்த்தமாக இருக்கின்ற போதிலும் சில காலங்களில் அங்கு நடை பெற்ற நிகழ்வுகள் மறந்து போகும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் நூற்றுக்கு மேற்ப்பட்ட புகைப்படங்கள் எடுக்கும் போது அவை பெரும்பாலும் ஒழுங்கு செய்யப்படுவதில்லை. எனவே அவற்றை சீராக பேண விரும்புவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான வழியாக இருக்கும்.
பிரயாண குறிப்பேடுகள் உருவாக்க பயணங்கள் செய்திருக்க வேண்டுமா?
பிரயாண குறிப்பேடுகள் ஓர் பிரயாண வழிகாட்டி போன்றது. அது மனதில் சில இடங்களை எப்படியாவது ஒரு முறையேனும் சென்று பார்த்து விட வேண்டும் எனும் ஆசை இருக்கும் பலருக்கும் அனுபவங்களை சேர்ப்பதற்காய் தெரியாத ஊரில் புரியாத மொழி பேசி அறியாத மக்களுடன் இருக்க ஆசைப்படும் சிலருக்கும் கூடப் பொருத்தமானது எனலாம். எண்ணங்களே செலயகின்றன எனும் விவேகானந்தரின் பொன்மொழியால் குறிக்கப்படுவது போல நாம் பிரயாண குறிபேடுகள் மூலம் பிரயாணம் செய்ய விரும்பும் இடங்களை திட்டமிட்டு குறித்து வைப்பதன் மூலம் நம் எண்ணப்படி என்றோ ஓர் நாள் அதை நிறைவேற்றியும் கொள்ளலாம்.
இவ்வாறான குறிப்புகளில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் என்ன?
அந்த இடத்தைப் பற்றிற நம் எண்ணங்களை குறிப்புகளாக எழுதலாம், ஓவியம் வரைதலில் விருப்பம் உள்ளவர்கள் சிறு வரைதல் குறிப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக புகைப்படக் கலையில் ஆர்வம் உள்ளவர்கள் தமது தனித்துவமான புகைப்படங்களையும் தொகுத்து வைக்கலாம். குறிப்புகள் நமது தேவைக்கேற்பவும் விருப்பதிற் கேற்பவும் இருப்பதால் பயணச் சீட்டுக்கள், நாம் சுவைத்த உணவு வகைகளின் மேலுறைகள் கூட சேர்க்க கூடியவை.
எவ்வாறு பிரயாண குறிப்பேடுகளை தயாரிப்பது எப்படி?
இதற்கு குறிப்பிட்ட ஒழுங்கு என ஒன்று கிடையாது. இருந்தும் நாம் எதையும் தவற விடாதிருக்க அன்றய நாளின் ஒட்டுமொத்த சம்பவங்களையும் சாதாரணமாக குறித்துக் கொள்ள வேண்டும். சேகரிக்க வேண்டிய பிரயாணச் சீட்டுகள் அல்லது வரைபடங்கள் (Maps) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இறுதியாக அனைத்தையும் ஒன்றிணைத்து நம் விருப்பப்படி மனம் கவரும் வகையில் பிரயாண குறிப்பேடுகளைத் தயாரிக்க வேண்டும்.
வாழ்வின் ஞாபகங்கள் விலை மதிக்க முடியாத பொக்கிசங்கள். அதனை பாதுகாப்பாக பேனுவதன் மூலம் நமக்கு எப்போது தவறவிடப் பட்டாலும் அதனை மீட்டிப் பார்க்கக் கூடியதாக இருக்கும். அனைவருக்கும் ஞாபகங்களை சேமிக்க வாழ்த்துக்கள்.