நினைத்தாலே இனிக்கும் பள்ளி பருவ நினைவுகள்!!!

தோழமையில் தொலைந்து போன என் பள்ளி பருவ நினைவுகளை அசை போட்டபடியே நகர்ந்து செல்கிறது என்  பேருந்தின்  பயணம்…மீண்டும் தொலைய எனது கல்லூரி காலங்கள் இருப்பதை மறந்து….

ஒவ்வொரு  மனிதனுக்கும் வாழ்க்கையில மறக்க முடியாத பல அனுபவங்கள் இருக்கும், எல்லாவற்றிலும் பள்ளி காலத்தின் போது ஏற்பட்ட அனுபவம் தான் இனிமையானதாக இருக்கும்.அதே போல தான் எனக்கும்… மாணவராக இருந்த அந்த பசுமையான நாட்களை  எவ்வளவு காலம் சென்றாலும் மறக்க முடியாது.பள்ளி வாழ்க்கையில ஏற்படுகிற சின்னச் சின்ன சந்தோஷங்கள், முதல் காதல், ஏமாற்றங்கள்,  நகைச்சுவையான சம்பவங்கள் ,துக்கங்கள் எல்லாம் அந்தந்த வயதில் எம்மை ஒரு பக்குவ நிலைக்கு இட்டு சென்றிருக்கும் இல்லையா?

சிறுவராக நாம் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து அங்கிருந்து விலகும் வரையும் உள்ள அந்த காலப்பகுதியில் நம்மில் எவ்வளவு மாற்றங்கள் ???அன்று வீடு என்னும் சிறைக்கு ஒரு திறவு கோலானது பள்ளிக்கூடம் ,நம்மிடையே உள்ள பல திறமைகளை வெளிக்கொணர்ந்து ,சமுக மக்களிடையே ஒரு நற்சிற்ப்பமாய் விளங்க செய்ததும் நமது  பள்ளி தான்..


happy-life-in-school


ஆண் பெண் பேதம் பாராத நண்பர்கள், இனம், மதம் அறியா பிஞ்சு உள்ளங்கள், கள்ளம் கபடம் இல்லாத மனங்கள்…. எப்போதுமே கடந்த பள்ளி காலங்களை திரும்பி பார்க்கையில் அது பொக்கிசமாக தான் இருக்கும். எதை பற்றியும் கவலையில்லாத விடலைப்பருவம். என்னவொரு மகிழ்ச்சியானதொரு காலகட்டம் அல்லவா?

வகுப்பில் அடிக்கும் அரட்டை, அயர்ந்துவிடும் குறட்டை, மாற்றிக் கொண்ட சட்டை மனதில் பதிந்த சுவடு!

சிலநேரம் அடிதடி அடுத்தநொடி இணைந்தபடி நட்பில் மட்டும் ஏன் இப்படி?

பாடம் எடுக்கையில் வேடிக்கை தேர்வு அறையில் படுக்கை தோல்வி அடைவது வாடிக்கை இதுதான்டா எம் வாழ்க்கை!

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தேர்விறுதித் திரையரங்குகள் நண்பன் வீட்டு விழாக்களில் இனிமையான சேட்டைகள்!

பள்ளி நாட்களை நினைக்கும் போது கவிதை தெரியாத எனக்கு கூட கவிதை வருது..


childrens-life-in-school


பள்ளியில் நமக்கு பிடித்த ஆசிரியர் எது சொன்னாலும் அதனை அப்படியே பின்பற்றும் பழக்கம் கொண்டிருப்போம். எனக்கு நன்றாக நினைவுள்ளது நாங்கள் உயர்தரம் படிக்கும் போது எமது கணித ஆசிரியர் ரவி. அவர் தான் அனைத்து  மாணவிகளுக்கும் crush. அவர் பாடம் நடத்தும்போது ஒழுங்காக கவனிப்பது,. மற்ற பாடங்களை விட அந்த பாடத்தில் மட்டும் அதிக அக்கறை எடுப்போம், மற்ற வகுப்புகளை புறக்கணித்தாலும் கணித வகுப்பிற்கு மட்டும் முதல் ஆளாக வருகை தருவது என உற்சாகமாக பம்பரம் போல சுழல்வோம். பாடம் நடத்தும்போது ஆசிரியரை ரசித்து பார்ப்பது, அவர் கரும்பலகையை அழிப்பதை கூட ரசிப்பது, ஆசிரியர் அணியும் ஆடைகளை குறிப்பெடுப்பது, அவரின் சிரிப்பை ரசிப்பது என பள்ளிக்காலம் சுவாரஸ்யமாக போனதுண்டு. பள்ளிக்காலங்களில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு நிச்சயமாக இந்த Crush ஏற்படும்.


mathsteacher


தேர்வு காலங்களில் ஆசிரியருக்கு தெரியாமல் நண்பனுக்கு விடை சொல்லி கொடுப்பதும் நாம் களவாக நண்பனிடம் கேட்டு எழுதுவதும், ஆசிரியர் பார்த்து விடடால் சமாளிப்பதும் ஒரு வகை ஆனந்தமே. நான் ஒருவருடன் கோவம் என்றால் எனது நண்பனும் அவருடன் கதைக்க கூடாது என நினைப்பது, அப்படி எனது நண்பன் அவருடன் கதைத்தால் நன்பனுடனும் கோவிப்பது. அந்த காலகட்டத்தில் நண்பர்களிடையே possesiveness அதிகம் காணப்படும்.

பள்ளி காதலை நினைத்துப் பார்க்கிறேன் அமைதியான ஒடையில் சிறு அலையெழுப்பும் சத்தங்களாய்என் மனதில் சிறு புன்னகை. இனிய அழகான தவறு பள்ளி காதல், திரும்ப கிடைக்காத திருவிழா  அது. அனைவரும் நிச்சயமாக பள்ளி காலத்தில் காதல் வசப்பட்டிருப்பீர்கள் தானே? பூவிழி பார்வையில் மலர்ந்த அந்த காதலில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு மட்டுமே இருந்திருக்கும். 9 பாடங்களில் ஒன்றைச் சேர்த்து 10ம் பாடமாய் காதல் பாடம் இருக்கிறது என எண்ணி திரிந்த காலம் அது…

“ஞாபகம்  வருதே ஞாபகம்  வருதே

பொக்கிசமாக  நெஞ்சில்  புதைந்த  நினைவுகள்  எல்லாம் ஞாபகம்  வருதே”


first-love-in-school


குழுக்களாக பிரிந்து சிறு பிள்ளைகள் போல சண்டை போடுவது பின்னர் சமாதானம் ஆவது. கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் அல்லவா அதனால் தான் கோபத்தை மறந்து மீண்டும் நண்பர்கள் ஆகினோம். ஆனால் இப்போது அப்படி இல்லையே! பள்ளி பருவ நட்பே உண்மையானது, அதில் பொறாமை, துரோகம், போட்டி எதுவுமே இருக்காது.அப்படி ஒரு நண்பர் கல்லூரி வந்து இன்னுமும் எனக்கு கிடைக்கவில்லை. அது இன்று வரை எனக்கு ஏக்கமாகவே உள்ளது.

“மறக்கமுடியாத நினைவுகள் துறக்க விரும்பாத சுகமான சுமைகளாக என்றும் என் மனதில்  பள்ளி காலம்! “

என் வசந்த கால நினைவுகளை புரட்டி பார்த்த வண்ணம் வந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை, நான் பேருந்தை விட்டு இறங்கும் நேரம் வந்து விட்டது நண்பர்களே மீண்டும் சந்திக்கிறேன்.

உங்கள் பள்ளி நினைவுகளையும் நிச்சயம் பகிரவும்!

Leave your comment
Comment
Name
Email