மடிக்கணணியின் Battery அதிக நேரம் நீடித்திருக்க 6 சிறந்த வழிகள்!

மடிக்கணணிகள் இலகுவாக எங்கும் எடுத்துச் செல்ல கூடியதாகவும் மின்சாரத்தை Battery இன் உதவியுடன் பயன்படுத்தி இயங்கக்கூடியதாயும் வடிவமைக்கப்படிருக்கும். இருந்தும் அநேகமான பயனர்களால் அவர்களின் Battery அதிக நேரம் நீடிப்பதில்லை எனும் குற்றச்சாட்டை கேட்கக் கூடியதாக இருக்கும். அதனை நிவர்த்தி செய்து அதிக நேரம் உங்கள் மடிக்கணணியை பயன்படுத்த பின்பற்றக்கூடிய இலகுவான 6 வழிகள் கீழே,

1. திரையின் ஒளியின் அளவை குறைத்து பயன்படுத்துங்கள்.

மடிக்கணணியின் Battery இல் அதிகளவு செல்வாக்கு செலுத்தும் காரணிகளில் இதுவும் ஒன்றாகும். மின்கலத்தின் பாவனையின் அளவினை அதிகளவில் உறிஞ்சிக் கொள்ளும் காரணியாக திரையின் வெளிச்ச அளவு (Brightness) திகழ்கிறது. இயன்றவை திரையின் வெளிச்ச அளவினை குறைத்துப் பாவிப்பது மடிக்கணனியின் Battery ஐ அதிக நேரம் நீடித்து வைக்கும். இரவு நேரங்களில் Night Light Mode இல் பாவிப்பது தேவையற்ற UV ஒளியின் அளவை கட்டுப்படுத்துவதால் நம் கண்களுக்கும் மிக நல்லது.


night-mood-in-laptop

2. Bluthooth & Wifi பாவனையில் இருப்பின் அதனை Off செய்யுங்கள்.

மடிக்கணனிகள் நாம் பயன்படுத்தும் கையடக்க தொலைபேசிகள் போன்ற செயற்பாடுகளக்   கொண்டவை. Wifi மற்றும் Bluthooth செயற்பாட்டில் இருக்கும் போது மடிக்கணணிகளும் தன்னியக்கமாக  Scan செய்து செயற்ப்பாட்டில் உள்ள ஏனைய சாதனங்களை கண்டறியும். இவை குறித்த நேர இடைவெளியில் மீண்டும் மீண்டும் செயர்ப்படுத்தப்படும். இச் செயற்பாடுகள் மடிக்கணனியின் Battery ஐ அதிகளவில் பயன்படுத்துகின்றன. எனவே இச் சாதனங்களைப் பயன்படுத்தாத போது சேவைகளை முடக்குவதன் மூலம் Signal ஐ தேடுவதற்கு செலவிடப்படும் Battery இன் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.


wifi-bluetooth

3. பின்னணியில் இயங்கும் சேவைகளை (Background Apps) அகற்றி விடுங்கள்.

அலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் போது தொடர்ச்சியாக மடிக்கணணியை WiFi இணைப்பில் வைத்திருக்கவேண்டிய நிலை இருக்கும். இவ்வாறான சூழ்நிலைகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையான Programs ஐ மட்டும் இயங்கு நிலையில் வைத்திருப்பது நல்லது. இதே நடைமுறையை Internet Browser களிலும் பின்பற்றுங்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையான Tabs களை இயங்குநிலையில் வைத்திருக்க வேண்டும். இவற்றையும் தாண்டி Battery அதிக நேரம் நீடித்திருக்க செய்ய Lighter Programs ஐ பயன்படுத்தலாம். உதாரணமாக தரவுகளை குறிபெடுத்து வைப்பது போன்ற செயற்ப்பாடுகளுக்கு MS Word இற்குப் பதிலாக Notepad ஐப் பயன்படுத்துவது போதுமானது.


background-apps

4. Ad Blocker களைப் பயன்படுத்துங்கள்.

நமக்குப் பிடித்த வலைதளங்களை அடிக்கடி பார்வையிடுவது நம் இயல்புகளில் ஒன்று. பயனுள்ள வலைத்தளங்களை அடிக்கடி பார்வையிடுவதில் தவறேதும் இல்லை இருந்தும் நாமக்குப்பிடித்த வலைதளங்களைப் பயன்படுத்தும் போது தன்னிச்சியாக தோன்றும் விளம்பரப்பட்டிகள் நமை பெரும்பாலும் சலிப்படையச் செய்துவிடுகின்றன. இவை நாம் பயன்படுத்தும் Battary இன் அளவில் ஓரளவு தாக்கம் செலுத்துபவையாகவும் உள்ளன. எனவே  Ad Blocker இனைப் பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற விளம்பரங்களை தடை செய்து Battery இனை சேமிக்க முடியும்.


ad-blocker

5. Touch pad இனைப் பயன்படுத்துங்கள்.

மடிக்கணணியில் உள்ள Touchpad ஆனது வெளியக Mouse இனைப் போன்ற பெரும்பாலான செயல்பாடுகளை உள்ளடக்கியதாகவும்  சிறப்பாக செயல்படக்கூடிய வகையிலுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் Mouse இல் கிடைக்கும் லாவகத்தன்மையை உணர முடிவதில்லை என்பதனால் பலராலும் வெளியக Mouse இணைப் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. அத்தியாவசியமாய் Mouse இன் தேவையற்ற சந்தர்பத்தில் அதனை அகற்றி Touchpad இணைப் பயன்படுத்துவது மிகக் குறைந்த Battery ஐப் பயன்படுத்தும் நிலையை ஏற்ப்படுத்தும். இதே போன்று ஏனைய USB சாதனைகளையும் பயன்படுத்தாத சந்தர்ப்பங்களில் அகற்றுவது Battery ஐ நீடித்திருக்கச் செய்வனவாய் அமையும். உதாரணமாக 4G Dongle மற்றும் Speaker போன்றவையும் அடங்கும்.


touch-pad-using

6. மடிக்கணனியின் சராசரி வெப்பநிலையில்  பேணுங்கள்.

மடிக்கணணிகளை பயன்படுத்தும் போது அதிகளவு சூடாகும் வரை பயன்படுத்துவது Batteryஐ பாதிக்கும் காரணிகளில் ஒன்றாகவே காணப்படுகிறது. மடிக்கணணியைப் பயன்படுத்தும் போது சூடாக இருப்பதாக உனரும் சந்தர்ப்பத்தில் காற்று இடைவெளிகளை தடை செய்வதாய் இருக்கும் பொருட்களை அகற்றி திறந்த வெளியில் இருப்பது போன்ற  அமைப்பை ஏற்படுத்துவது சிறந்தது. மடிக்கணனிகளை தலையணை மற்றும் கம்பளி போன்ற மேற்பரப்புகளில் பயன்படுத்தாது கிடையான சமதரைகளில் வைத்து பயன்படுத்துவது இயன்றவரை சராசரி வெப்பநிலையில் வைத்திருக்க உதவும்.

இவை மடிக்கணணியின் batteryஐ நீண்ட நேரம் பேணும் சில இலகுவான வழிமுறைகளாகும். நீங்கள் அறிந்த வழிமுறைகள் மற்றும் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave your comment
Comment
Name
Email