உலகின் மர்மமான பெர்முடா முக்கோண உண்மைகள்

இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் ஆச்சரியத்தின் கட்டமைப்பில் சூழப்பட்டது தான். சில விஷயங்கள் எமக்கு புலப்பட்டாலும் இன்னும் நம்மால் அறிய முடியாத மர்மங்கள் நம் கண் முன்னே ஏராளம் உள்ளது. தற்போது அறிய முடியவில்லையே என்பதற்காக என்றுமே அறிய முடியாத விஷயமாக அதை கருத முடியாது. இன்று நம்மால் மிக எளிமையாக விளக்க முடியும் பல விஷயங்கள் ஒரு காலத்தில் சாத்தியமே இல்லை என்று பலரால் கைவிடப்பட்டது தான். அதில் இன்றும் ஒரு விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம். இதை சாத்தான் முக்கோணம் என்றும் சிலர் கூறுகின்றனர்.


Bermuda-Triangle


வட அமெரிக்காவிற்கு கிழக்கே பனாமா கால்வாய்க்கு அருகே அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டியிருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியா என ஆராய்ந்தால் அதன் செயல் பல நூறு ஆண்டுகளாக மர்மமாக தான் இருக்கிறது என தெரிகின்றது. விமானம் கண்டுபிடிப்பதற்கு முதல் கடல்வழி போக்குவரத்து தான் தொலைதூர பயணத்துக்கு உதவியது. இயற்கை சீற்றங்கள் மற்றும் கடல் கொள்ளையர்களால் அவை அழிக்கப்பட்டிருந்தால் அச்செய்தி அக்காலத்தில் யாருக்கும் தெரியாமல் அந்த கப்பலுடனேயே போயிருக்கும். ஆனால் பெர்முடாவின் மர்மங்கள் தெரிய வந்த போது அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.


Ship


கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை இந்த பகுதியில் காணாமல் போன விமானங்கள் ,கப்பல்கள் பற்றிய தடயங்கள் ஒன்று கூட கண்டுபிடிக்கப்படவில்லை. பெர்முடா முக்கோணம் இதுவரை ஆயிரம் உயிர்களுக்கு மேல் காவு வாங்கியுள்ளது. உங்களுக்கு இது பற்றி ஆச்சரியமாக உள்ளதா?

திசைகாட்டிகள் பெர்முடா முக்கோணத்திற்கு அருகில் செல்லும் போது செயல் இழக்கின்றதாகவும் அப்பகுதியில் வானத்தில் ஒரு எரிபந்து காணப்பட்டதாகவும் கொலம்பஸ் கூறினார். பல வருட ஆராய்ச்சியின் பின் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலையின் வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பம் அதற்கு காரணம் என அறியப்பட்டது. பெர்முடா முக்கோணத்தில் இவ்வுலகையே அழிக்கும் அளவுக்கு எரிமலை வெடிக்கிறது. அந்த பூமி அதிர்வால் கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சத தனமாக இருக்கும். ஒரு சிறிய அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சத அலையாக உருவாகி பெரிய கப்பலை கூட கவிழ்ந்து விடும். கவிழ்ந்த கப்பலில் இருந்து தளத்திற்கு எந்த செய்தியும் வராதது  இன்னொரு ஆச்சரியமாக இருந்தது.


Sea


சரி, கடல் மார்க்கமாக போகும் கப்பல்கள் காணாமல் போக எரிமலை, பூகம்பம், ராட்சத அலை, கடல் நீரோட்டம் என பல காரணங்கள் இருக்கின்றன. அனால் வான் மார்க்கமாக செல்லும் விமானங்கள் எப்படி காணாமல் போகின்றன? என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கினர் விஞ்ஞானிகள். 1945 ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த போர் விமானங்கள் ஐந்து பெர்முடா முக்கோணத்தின் மீது பறந்தன. ரோந்து பணிக்காக அந்த விமானங்கள் சென்ற போது சிறிது நேரத்தில் அனைத்து விமானங்களும் தள கட்டுப்பாட்டில் இருந்து மறைந்தது. மொத்தமாக ஐந்து விமானங்களும் காணாமல் போயிருந்தன. அந்த விமானங்கள் பெர்முடாக்கு அருகில் உள்ள சதுப்பு நிலக் காடுகளில் விழுந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறினாலும் இதுவரை அவற்றின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியம் ஆக உள்ளது.


Bedrmuda-Lost-Plane


விமானம் காணாமல் போக என்ன காரணம் என வெகு நாட்கள் விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருந்தார்கள். திசைகாட்டி குழம்புவதன் காரணமாக அது சூரியனின் மின்காந்த அலைகளாக இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருதினார்கள்.

பெர்முடா முக்கோணம் பற்றிய எனது கருத்து.

கடலுக்கு அடியில் ஏற்படும் எரிமலை வெடிப்பினால் கடல்நீர் உள் ஈர்க்கப்படுகின்றது அங்கு நீரின் சுழற்சியால் நீருக்கு மேல் காற்றுமண்டலம் அதிவேகமாக நீரினுள் ஈர்க்கபடுகின்றது இதனால் அங்கு செல்லும் விமானங்களும் உள் ஈர்க்கப்பட்டு எரிமலையில் அகப்பட்டு எரிக்கபடுகிறது இங்கு ஏற்படுத்தும் எரிமலை சாம்பல் மணல்களாக கரை ஒதுங்குகின்றன.  உதாரணமாக நாம் எரிந்த கட்டையில் நீரை ஊற்றினால் அவ் நீர் உள் ஈர்க்கப்படும் அது போலவே…


[embedyt] https://www.youtube.com/watch?v=ulTDyM4bAhY[/embedyt]

இது பற்றிய உண்மை இன்னும் யாராலும் தெளிவாக கண்டுபிடிக்க முடியவில்லை.  விஞ்ஞானம்  ஏதாவது ஒரு செயலின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறது. உலகில் பல மர்மங்கள் இன்னுமும் கண்டுபிடிக்க முடியாமலே உள்ளது. நீங்கள் பெர்முடா பற்றிய எனது கருத்தை ஏற்றுக்கொண்டால் கீழுள்ள கருத்துப்பெட்டியில் பதிவிடுங்கள்.

Leave your comment
Comment
Name
Email