நமக்குப் பொருத்தமான தொழிலை தெரிவு செய்தல்

நமது கல்வி, திறமை, ஆர்வம் என்பன தொழில் எனும் இலக்கை நோக்கி பயணிக்கச் செய்யும் காரணிகளாகும். இன்றைய காலகட்டத்தில் பலருக்கு தமக்கு பொருத்தமான தொழிலை தெரிவு செய்வது கடினமானதொன்றாக உள்ளது. கொஞ்சம் கடின உழைப்புடன், சரியான திட்டமிடலும் நம்மை பற்றிய சுய மதிப்பீடும் சரியான தொழிலை தெரிவு செய்வதற்கு எதுவாக இருக்கும். நம் தொழில் தேர்வானது சுயநல தன்மையுடன் அமையாது விருபுகளில் இணைந்து குடும்பத்தினர்க்கும் ஏதுவான ஒன்றாக அமைதல் நல்லது.

Self-Confident

“கனவு மெய்ப்பட வேண்டும்”

வேலையை உழைப்பதற்கான ஓர் ஊடகமாக என்னும் போது நமக்கு அவ வேலையின் மீதான பிடிப்பு இல்லாமல் போகிறது. நம் செய்யும் தொழிலினை நமக்கு பிடித்து செய்யும் போது மட்டுமே வினைத்திறனான விளைவை நம்மால் காட்ட முடியும். நம் கனவு வாழ்க்கையை நிஜத்திலும் தேடிக் கொள்ளுமாறு இருக்கும் போது அது சாத்தியமாகிறது. நம் பொழுது போக்குகளை தொழிலாக மாற்றி கொள்ள வேண்டும். உதாரணமாக வரைதலில் ஆர்வமுள்ளவர்கள் டிசைனர் ஆகவோ விளையாட்டினை விரும்புபவர்கள் குறித்த விளையாட்டின் பயிற்சியாளராகவோ இருக்கும் பட்சத்தில் வேலை மீதான வெறுப்பு ஏற்படுவதில்லை. அதே வேளை பாடசாலையில் கடக்கும் போதே மொழி மீது ஆர்வம் கொண்டவர்கள் எழுத்தாளராகவோ அல்லது ஆசிரியராகவோ இருபது போன்ற தெரிவுகள் சிறப்பானவை.

Choose-Your-Career

“திறமை மீதான  நம்பிக்கை”

நாம் விரும்பியோ விரும்பாமலோ நமக்குள்ளே இயல்பாக சில திறமைகள் புதைந்து கிடக்கும் அவை பிறப்பிலேயோ அல்லது நம் ஆர்வத்தின் அடிப்படையிலேயோ நமை அறியாமலேயே விருத்தி செய்யப்பட்டிருக்கும். அவ்வாறாக எதில் நாம் திறமைசாலி என அறிந்து அப் பாதையில் பயணிப்பது நமக்கான சிறந்த எதிகாலத்தை தரும். திறமையின் அடிப்படையில் வேலை தேடும் போது நாம் வேலையை தெரிவு செய்வதும் நமக்கு அவ் வேலை கிடைப்பதும் இலகுவான ஒன்றாக இருக்கும். உதாரணமாக மின் உபகரணங்களில் திருத்துவதில் பரிட்சயம் இருக்கும் பட்சத்தில் மின் பொறியாளராகவோ அல்லது சமையல் செய்வதில் திறமை இருக்கும் பட்சத்தில் ஒரு சிறந்த சமையல்காரராகவோ இருப்பது நிலையான தொழிலை உறுதி செய்யும். சிலவேளைகளில் நம் முடிவுகள் போர்த்தமற்றதாக தோணும் போது பெற்றோர், நண்பர்கள், நமக்கு கற்பித்த ஆசிரியர்கள் நமை நன்கறிந்து நம் திறமைகளை அடையாளம் காட்டக் கூடும் அவை சிலவேளைகளில் நமை ஆச்சரியப்படவும் வைக்கக் கூடும்.

Youth-Strength-Training

“தற்போது நம் நிலை பற்றிய எண்ணம் வேண்டும்”

“உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்….” எனும் பழைய திரைப்படப் பாடல் இன்றைய இளைஞர்களுக்கும் மிகப் பொருத்தமானதாக இருக்கும். முதலில் நம்மால்  இருப்பினை உணர்ந்து கொள்ள வேண்டும். உதாரணமாக மருத்துவராக நம்மால் போதுமான உயர் தர பெறுபேறுகளை எடுக்காது போகும் சந்தர்பத்தில் அரச பல்கலைக்கழகம் ஒன்றில் மருத்துவருக்கான கல்வியை தொடர்வது என்பது சாத்தியமற்றது. சேவை மனபாண்மையுடன் தொழில் புரிய ஆசைப்படுபவர்கள் மருத்துவம் சார்ந்த பிற தொழில்களை தெரிவு செய்வதும் பொருத்தமானதாக இருக்கும். நமது தெரிவுக்கு குடும்ப நிதி நிலைமை சிலவேளைகளில் ஏதுவானதாக இல்லது போகும் போது ஸ்காலர்ஷிப், மானியம், மற்றும் தொழிற்பயிற்சி திட்டங்கள் போன்றவற்றினூடாக இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அடிப்படை கல்வியை ஒரு போதும் தவற விட்டுவிடக் கூடாது ஏனெனில் நான் குறித்த தொழிலிற்க்கான சாதியப்பாடுகளை நாமே ஏற்படுத்திக் கொள்ள நம் கல்வி உறுதுணையாக இருக்கும்.

Understand-Your-Goal

“எதிகாலம் பற்றிய விழிப்புணர்வு”

பலர் தற்கால நடைமுறைக்கு சற்றும் பொருத்தமற்றதும்  நிலைத்தன்மையற்றதுமான தொழிலைத் தெரிவு செய்து அதனை தொடர்வதில் ஆர்வம் காட்டுவதை இன்றைய இளைஞர்கள் பெருமையாக கருதுகின்றனர் ஆனால் எதிகாலம் பற்றி சிந்திப்பவர்கள் தமக்கான திறனை விருதிதி செய்யும் வகையில் ஓரளவு வருமானம் ஈட்டும் வகையில் தொழிலை தெரிவு செய்து வாப்புகளை உருவாகிக் கொள்கின்றனர். விருப்பங்கள் குறைவாக இருக்குமானால் குறுகிய காலத்தில் தொழிலில் நுழைவதற்கான வாய்பிருக்கும் போது அதனை தெரிவு செய்வது நன்மையானதாகும். தொழிலானது நமது விருப்பத்தேர்வு என்பதிலும் அதில் உறுதியாய் இருக்கும் பட்சத்தில் பிறரை நிதிக்காக திணிக்கும் வகையில் இருக்காது பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும் எனவே தற்காலிக தொழில் மூலம் நிதி நிலைமைகளை கவனித்துக் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பம் அமையும் நேரத்தில் நம் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். எதிகாலத்தில் நிலையற்ற தொழில்களை தெரிவு செய்து பின்னர் மீண்டும் முதலிருந்து ஆரம்பிப்பதற்கு நமது வயது மற்றும் நிதி என்பன போதாது போகும் வாய்ப்புகளே அதிகம். எனவே பொருத்தமான ஆலோசனைகளின் அடிப்படியில் தொழிலை தெரிவு செய்து கொள்ளுங்கள். காலம் கடந்த ஆலோசனைகள் பயனளிப்பதில்லை என்பதை நினைவில் கொண்டு இன்றே தொழில் பற்றிய தீர்மானத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

Leave your comment
Comment
Name
Email