Facebook – Leading Social Network
Mark Zukerberk இனால் ஆரம்பிக்கப்பட்ட Facebook ஆனது 1.15 பில்லியன் இற்கும் அதிகமான பயனர்களைக் கொண்டது. இது Brand இற்கான மிக முக்கியமான சமூக வலைத்தளமாக கருதப்படுகிறது. இலகுவாக அனைவராலும் கையாளக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பம்சம் எனலாம். கட்டணம் செலுத்தப்படும் விளம்பரங்கள் மூலம் அதிகளவில் வருமானம் ஈட்டப்படுகிறது.
- 751 மில்லியன் பயனர்கள் 7000 இற்கும் அதிகமான சாதனங்களில் பயன்படுத்துகின்றனர்.
- 10 மில்லியனிற்கும் அதிகமான Mobile Apps, Facebook உடன் இணைந்தவாறு செயல்படுகின்றன.
- 23% அதிகமானோர் ஒரு நாளில் 5 தடவைக்கும் அதிகமாக தம் கணக்குகளைப் பார்வையிடுகின்றனர்.
- 74% ஆன வர்த்தக நிறுவனங்கள் Facebook தமது வர்த்தக நடவடிக்கைகளிற்கு அதிக பங்களிப்பதாக கருதுகின்றனர்.
- தினமும் 50 billion புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
- அதிக பயனர்களை கொண்டிருக்கும் நேரம் 1p.m – 4p.m வரை.
Twitter – Micro Blogging
Jack Dorsey இனால் ஆரம்பிக்கப்பட்ட Twitter ஆனது 500 மில்லியனிற்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. 140 எழுத்துருக்கள் (Charcters) எனும் வரையறையில் சுருக்கமாக பதிவுகளை (Tweets) செய்யும் வசதியளிக்கிறது. மிக வேகமாக brands பயனர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளமை சிறப்பாகும்.
- 288 மில்லியன் இற்கும் அதிகமான Active User களைக் கொண்டுள்ளது.
- 28% மான குறுஞ்செய்திகள் (Tweets) “Please RT!” எனும் உள்ளடக்கத்தின் மூலம் Retweet செய்யப்படுகின்றன.
- 60% ஆன பயன்கள் Twitter இனை தம் கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்துகின்றனர்.
- அண்ணளவாக 20 மில்லியன் பயனர் கணக்குகள் போலியானவை.
- சராசரியாக ஒருநாளில் 400 மில்லியன் tweets அனுப்பப்படுவதுடன் ஒரு பயனர் கணக்கில் 208 tweets எனும் சராசரியையும் கொண்டுள்ளது.
- அதிக பயனர்களை கொண்டிருக்கும் நேரம் 1p.m – 3p.m வரை.
Google+ – Build Circles
Larry Page & Sergey Brin ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட Google+ இனை 500 மில்லியனிற்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. Google SEO ஒன்றிணைந்து சேவை வழங்குவதால் அநேக Brands ஆல் வரவேற்க்கப்படுகின்றது. தொழிசார் முறையை அடிப்படையாய் கொண்ட அநேக பதிவுகளைக் கொண்ட இடமாக Google+ திகழ்கிறது. 343 மில்லியன் இற்கும் அதிகமான Active User களைக் கொண்டுள்ளது.
- பயனர்களில் 67% ஆனோர் ஆண்கள் ஆகும்.
- 80% ஆன பயனர்கள் வாரம் ஒருமுறையும் 60% ஆன பயனர்கள் தினமும் Google+ இல் பார்வையிடுகின்றனர்.
- +1 பொத்தானானது தினமும் 5 பில்லியன் தடவைகள் செயற்படுத்தப்படுகின்றது.
- 40% ஆன வர்த்தக நிறுவனங்கள் Google+ இணைப் பயன்படுத்துவதுடன் 70% ஆன நிறுவனங்கள் Google+ இணைப் பற்றி மேலும் அதிகளவில் அறிந்துகொள்வதற்க்கான ஆர்வத்தைக் காட்டுகின்றன.
- பதிவிடப்படும் பதிவு வகையில் அதிகளவானவை Animated GIF வகையைச் சேர்ந்தவை.
- அதிக பயனர்களை கொண்டிருக்கும் நேரம் 8p.m – 11p.m வரை.
Linkedin – Business Oriented
Reid Hoffman ஆல் இயங்கும் Linkedin ஆனது 238 மில்லியனிற்கும் அதிகமான பயனர்களைக் கொண்டது. Linkedin ஆனது அத்தியாவசியமான சமூக வலைத்தளமாக கருதப்படுமளவிர்க்கு மிகத் திருத்தமானதும் அதிகளவில் தொழில் முறையை பின்பற்றுவதையும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தனிநபர் ஒருவரின் தொழில்சார் சுயவிபரக் கோவை போன்ற அமைப்பு பின்பற்றப்படுவது சிறப்பம்சமாகும்.
- 5 மில்லியன் Linkedin குழுக்கள் காணப்படுகின்றன.
- 27% பயனர்கள் தம் கையடக்க தொலைபேசிகளில் Linkedin பயன்படுத்துகின்றனர்.
- 50% பயனர்கள் இளமாணி பட்டம் பெற்றவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
- 81% பயனர்கள் குறைந்தபட்சம் ஒரு குழுவிலாவது அங்கத்துவம் வகிக்கின்றனர்.
- 42% பயனர்கள் தமது சுயவிபரங்களை சீராக உண்மைத் தன்மையுடன் பதிவேற்றம் செய்துள்ளனர்.
- 3 மில்லியனிற்கும் அதிகமான நிறுவனகளின் பிரத்தியேக பக்கங்களைக் கொண்டது.
- அதிக பயனர்களை கொண்டிருக்கும் நேரம் 5p.m – 6p.m வரை.
Pinterest – Discover Ideas
Paul Sciarra, Evan Sharp and Ben Silbermann ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவான Pinterest 70 மில்லியன் இற்கும் அதிகமான பயனர்களைக் கொண்டது. கூடுதலாக காட்சிகளில் கவனம் செலுத்தப்படும் Pinterset ஆனது பல பயனர்களின் காட்சியமைப்பு சார்ந்த தேவைகளின் கட்டாய தெரிவாக காணப்படுகிறது. பயனர்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்த சிறந்த தளமாக இது திகழ்கிறது.
- 69% இலும் அதிகமான பயனர்கள் பெண்களாகும்.
- 6% பயனர்கள் மட்டுமே தமது Pinterest கணக்குகளை Facebook உடன் இணைந்தவாறு பயன்படுத்துகின்றனர்.
- உணவு Pinterest இல் அதிகளவில் பயன்படுத்தப்படும் வகையாகவும் 57% ஆனோர் உணவு பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றனர்.
- ‘Nordstome’ ஆனது Pinterest இன் 4.4 மில்லியன் பயனர்களுடன் அதிகளவில் பின்தொடரப்படும் Brand ஆக கருதப்படுகிறது.
- அதிக பயனர்களை கொண்டிருக்கும் நேரம் 8p.m – 11p.m வரை.
Instagram – Share Photos and 15sec Videos
Kevin Systrom இனால் ஆரம்பிக்கப்பட்ட Instagram ஆனது 130 மில்லியனிற்கும் அதிகமான பயனர்களை கொண்டது. படங்களையும் சிறு காட்சிகளையும் அடிப்படைப் பதிவுகளாய் கொண்டது. விளம்பரங்கள் மிகக் குறைந்த அளவில் காட்சிப்படுத்தப்படுகின்றது ஏனெனில் அதிகளவில் கட்டணம் செலுத்தப்படும் வகையில் இருப்பதே காரணமாகும்.
- 16 பில்லியனிற்க்கும் அதிகமான புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
- சராசரியாக ஒரு பயனரால் 40 புகைப்படங்கள் பதிவேற்றப்படுள்ளது.
- “MTV” ஆனது Instagram இன்அதிகளாவான நபர்களால் (சுமார் 1.2 மில்லியன்) பின்தொடரப்படும் கணக்காக உள்ளது.
- ஒரு செக்கனனில் 8000 பயனர்களால் புகைப்படங்கள் like செய்யப்படுவதுடன் 1000 Comments யும் பெற்றுக் கொள்கிறது.
- 90% ஆனவர்கள் 35 வயதிலும் குறைவானவர்கள்.
- அதிக பயனர்களை கொண்டிருக்கும் நேரம் 5p.m – 6p.m வரை.
நீங்கள் அதிகளவில் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் பற்றிய அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொள்வதுடன் உங்கள் விமர்ச்சனங்களையும் Comment Box இல் பதிவிடுங்கள்.