“தீயினால் சுட்ட வடு உள்ளாறும்
ஆறாதே நாவினால் சுட வடு ”
என்பது வள்ளுவன் வாக்கு, மன அழுத்தத்தில் மூழ்கி கிடக்கும் மனிதர்களின் வார்த்தை வெளிப்பாடு பிறர் மனதில் என்ன தாகத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிவதில்லை. கொட்டி விட்ட வார்த்தைகளை திரும்பிப் பெற்றுக் கொள்ளவும் முடியாது எனவே சூழ்நிலைகேற்ப பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். பேசும் போதும் சூழலை நமக்கேற்ப பேணிக் கொள்ள சில வழிகள் கீழே,
கவனமாகப் பேசு
நாம் பேசுவதை கட்டாயம் கேட்க வேண்டிய அவசியம் கேட்பவருக்கு இருபதில்லை, குழப்பமாக ஒரு பொருளையோ அல்லது உணர்வையே வெளிபடுத்தும் போது கேட்பவருக்கும் அதே குழப்பம் நீடிக்கும். எனவே கூற வேண்டிய விடயத்தை மட்டும் குறிப்பிட்டுப் பேச வேண்டும். சோர்வாகவோ அல்லது மனம் குழப்பமாகவோ இருக்கும் சந்தர்பங்களில் மௌனமாக இருப்பது சிறந்தது. இவ்வாறன நேரங்களிலேயே சொல்வதறியாது பேசும் வாய்புகள் அதிகம். எனவே மௌனமாயிருத்தல் சிறந்த மருந்து. பிரச்சனைகளை கையாளும் போது பேசும் வார்த்தைகள் குறித்த பிரச்சனைக்கான தீர்வாய் அமையும் வண்ணம் இருக்க வேண்டும் மாறாக கடந்துந்து போன பழைய விடயங்களை திரும்பிப் கொண்டுவரும் வகையில் பேசுவது குழப்பத்தை விளைவிக்கும். பிறர் மனதை நோகடிக்கா வண்ணம் திறமையாகப் பேசுவது ஓர் கலை என்றே சொல்லலாம்.
உன்னிப்பாகக் கேள்
நமை பற்றிய விமர்சனங்கள் சரியோ தவறோ சுட்டிக் காடும் போது அதை கேட்டுக் கொள்ளும் பக்குவம் நம் மனத்துளே சிறப்பாக கட்டப்பட்ட சுவர் போல இருக்க வேண்டும். அது கோவமானாலும் சரி பயமானும் சரி வெளிப்படுத்தாமல் அதை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் வகையில் இருக்க வேண்டும். அது வடிகட்டியை போல தேவையானவற்றை மட்டும் முன்னிருக்கும் நபருக்கு கொடுக்கும் போது பல பிரச்னைகள் வளராதிருகும். அதே வகையில் நமக்கிருக்கும் கருத்து சுதந்திரம் பிறருக்கும் இருப்பதை அறிய வேண்டும் எனவே பிறர் பேசும் போது அதைக் குறுக்கிட்டுப் பேசுவது தவறாக அமையும். எல்லா நேரங்களிலும் தீர்வளிப்பதாய் எண்ணி அறிவுரை சொல்வது பலருக்கு எரிச்சலூட்டுவதாய் இருக்கும் எனவே பிறர் கூறுவதை கேட்பதே ஆறுதலளிப்பதாய் இருக்கும். அதே வேளையில் கவலையை ஒருவர் வெளிபடுத்தும் போது மனிதாபிமானத்துடன் அதைக் கேட்கும் மனோ பக்குவம் நம்மிடம் வளர வேண்டும்.
துல்லியமாக பதிலளி
சொல்லும் வார்த்தைகளில் நேர்மை தன்மையைப் பேண வேண்டும், பிறர் கூறும் கருத்தினைப் புரிந்துகொண்டு அதை ஏற்றுகொள்வதை வெளிபடுத்தவும் வேண்டும். தொடர்பாடலின் இலக்கே தகவல் இருவரிடமும் ஏகமனதாக பரிமாற்றம் செய்யபடுவதேயாகும். பதிலளிப்பதற்கு முன்பு தகவலினை முற்று முழுதாக கேட்டறிந்து கொள்ள வேண்டும். மேலும் தகவல் தெளிவற்றதாக இருக்குமிடத்து அது தொர்பான கேள்விகளைக் கேட்டறிந்து தெளிவாக புரிந்து கொண்ட பின் பதிலளிக்க வேண்டும். நாம் கூறும் விளக்கம் பிறரால் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும், அளவுக்கு மீறிய விளக்கம், கூறும் விடயத்தின் தெளிவுத் தன்மையை மழுங்கடிக்கச் செய்துவிடும். பதிலளித்த பின் கூறிய விடயம் சரியாகப் பரிமாற்றப் பட்டதா என கேட்பவர்களிடம் கேட்டறிந்து கொள்ளவதும் பதிலின் துல்லியதன்மையை பேணும்.
எவ்வாறாக இருப்பினும் சூழ்நிலையை புரிந்து கொண்டு பேசும் திறன் இயல்பாக நம்முள் வளர வேண்டும். நாம் நினைக்கும் அதே கோணத்தில் நமை சுற்றியிருபவர்களும் நினைப்பதென்பது சாத்தியமற்றது. எனவே இக்கட்டான சூழலில் பேசும் திறன் என்பது நம் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாய் இருக்குமென்பது உறுதி.