இலங்கையில் ஏறுவதற்கு ஏதுவான மலை தொகுதிகள் பல காணப்பட்டாலும் சிவனொலிபாதமலை (Sripada) அனைத்து மதங்களாலும் ஒன்றிணைந்த ஆன்மீக சிறப்பு வாய்ந்தததாக கருதப்படுகிறது. அனேகமானோர் இதன் சிறப்பாக ஆன்மீக அம்சங்களையும் தாண்டி சூரியோதயம் காண்பதற்கான வாய்ப்பை மட்டும் தருவதாய் அறிகின்றனர். இருந்தும் மிகக் கடினமான நெடுந்தூர பாதை வழியே இம் மலைக்கு என் சக நண்பர்கள் பலருடன் இம் மலையை ஏறிய அனுபவமானது பல வாழ்வியல் அம்சங்களையும் எனக்குக் கற்றுத்தந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
துன்பங்களையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்
சிவனொளிபாதமலை (Sripada) ஏறுவதற்கு 3 வழிகள் இருக்கின்ற போதிலும் கடினமான பாதை எங்களால் தெரிவு செய்யப்படிருந்தது. ஏறுவதற்கு படிகள் என்ற ஒழுங்கான கட்டமைப்புகள் இல்லாத போதும் இயற்கையை அனுபவிப்பதற்கு அதிகமான சந்தர்பத்தை ஈட்டித்தந்தது என்றே சொல்லலாம். அயன மண்டல பிரதேசமாதலால் மழை பொழிவதும் இல்லதிருப்பதுமாக இருப்பதால் பெரும்பாலும் படிகள் ஈரலிப்பாக காணப்படும். இருந்தும் அனைத்தையும் தாண்டிய நீர் நிலைகளின் அழகும் மரங்களின் செழிப்பும் துன்பங்களை மறக்கச் செய்யும் சிறப்பம்சமாக இருந்தன. எனவே சலிப்புடன் ஏறுவதர்க்கும் பதிலாக பயணத்தை இயன்றவரை ரசித்துக் கொள்ளுங்கள்.
ஒரே நோக்கத்தில் உறுதியாய் இரு
பலர் இம் மலை ஏறுவதற்கு பல காரனங்கள் இருக்கலாம், சிலருக்கு தனிப்பட்ட எதிர்பார்ப்புகளும் இருக்கலாம் அதை சாதிப்பதற்கும் மலையின் சிகரத்தை தொட்டுவிட வேண்டும் எனும் மன உறுதியும் எடுத்த நோக்கத்தில் உறுதியாய் இருப்பதற்கான சிந்தனையும் இருக்க வேண்டும். பலரை வெற்றிகரமாக மலை ஏறச் செய்ததில் இக் காரங்களே பெரும் பங்கு வகிக்கின்றன. நம்மோடு பலர் இதே போல் தமக்கான காரங்களுடன் மலை ஏறுவதைக் காண்பதும் நம்மை நிச்சயம் பிரம்மிக்கச் செய்யும். என் அருகில் 60 வயதிலும் அதிகமான பாட்டி ஒருவர் மலை ஏறுவதையும் கண்டவன் நான். மலையின் சிகரத்தை மட்டும் காண வேண்டும் எனும் நோக்கில் ஏறுபவர்களால் மீண்டும் அதே நோக்கில் மலை ஏற எத்தனிக்கும் போது அது பல வேளைகளில் வெற்றியளிப்பதில்லை.
உனை தடுக்கும் காரணி உன் மனம் மட்டுமே
நான் என் வாழிவில் அநேக மலைகளை ஏறி பரிச்சயம் ஆனவன் அல்ல, இருந்தும் இம் மலை ஏறுவது நிச்மற்றது எனும் எண்ணம் என் மதில் துளியளவும் இருக்கவில்லை. பலர் வாழ்வில் தம்மால் முடியாததற்கு பிறரை காரணம் காட்டலாம் அனால் இங்கு மலை ஏறும் போது அதை ஏறி முடிப்பது என்பதை நம் மனமே தீர்மானிக்க வேண்டும் இடையில் அதனைக் கைவிடுவது என்பது சுலபமற்றது, எப்படியாவது ஏறி முடித்து விட வேண்டும் எனும் எண்ணம் ஒன்றே அதை சிறப்பாக செய்து முடிப்பதற்கான மன வலிமையை நம்மிடம் கொண்டு சேர்க்கும் எனவே காரனங்கள் வெளியில் இருப்பதில்லை நம் மனமே அனைத்தயும் தீர்மானிக்கிறது, முடியாது என்பது எதுவுமில்லை நம் மனம் துணிந்துவிட்டால்…
ஒற்றுமையின் வலிமையை உணர்ந்து கொள்
இம் மலையை நான் 20 இலும் அதிகமான என் சக நட்புக்களுடன் ஏறிய அனுபவமுடையவன். இதில் ஆண், பெண், மொழி, மதம் என வேறுபாடுகள் இருந்தும் நட்பு எனும் ஒரே விடயம் அனைவரயும் இணைத்திருந்தது. ஒவ்வொரு தடவையும் வழியில் ஏற்ப்பட இடர்களை நிவர்த்தி செய்ய ஒருவருக்கொருவர் உதவி செய்தது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் தந்தது. தனியாக இதை செய்து முடித்திருக்க நிச்சயம் முடிந்திருக்கதது என எண்ணுகிறேன். ஒன்றாய் ஒரு வேலையை செய்வது கடினமானதையும் சுலபமாக்கும் வல்லமையை வழங்கும்.
எதை ஆரம்பித்தாயோ அதை செய்து முடி
சிலர் இடையிலேயே மலை ஏறுவதைக் கைவிடும் எண்ணத்தை தம்முள் எடுத்துக்கொண்டால் வாழ்விலும் அநேக விடயங்களை சிறு கஷ்டத்திலும் கை விடும் என்னத்தை கையவும் மனப்பாங்கை கொண்டுவரும். இம் மலையை ஏறி முடிப்பதென்பது சுலபம் என நான் சொல்லப் போவதில்லை இருந்தும் அதனை ஏறி முடிப்பதென எண்ணிய பின் அதனை கை விட எண்ணுவது உங்கள் வாழ்வின் அநேக வாய்ப்புக்களை கை விடுவதக்கு நீங்களே காரணம் என சுட்டி காட்டிவிடும். வலி இன்றி கிடைக்கும் எதுவும் எம் வாழ்வில் நிலைதிருப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வாழ்வில் ஒரு முறையாவது இங்கு பயணம் செய்யுங்கள்… அதன் அனுபவம் வாழ்நாள் முழுவதும மறக்க முடியாத நினைவுகளை உங்களிடம் சேர்ப்பதுடன் வாழிவியல் அம்சங்களையும் கற்றுத் தரும் என எண்ணுகிறேன்.
உங்கள் பயணம் பற்றிய அனுபவங்களையும் கருத்துக்களையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.