தமிழ் சினிமாவின் இன்றைய நிலை!!

சினிமா என்பது ஒரு ஜனநாயக தளம். இதனை அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒரு அற்புதமான படைப்பு எனலாம். இப்படிப்பட்ட சினிமா ஒரு நூற்றாண்டை  நோக்கி கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டு இருக்கிறது. முதலாவதாக  கீசகவதம் (1917) என்ற மௌனப் படத்தில் தொடங்கி 1931-ம் வருடம் வெளிவந்த காளிதாஸ் என்ற படத்தில் தான் பேச தொடங்கியது. பேசாத சினிமா பேசத்தொடங்கி, பாடத்தெரிந்தவர்கள் தான் சினிமா நட்ச்சத்திரங்களாக முடியும் என்ற நிலை மாறி, டப்பிங் முறை, ஒரு நடிகரே இரட்டை வேடத்தில் நடித்தல், படத்தொகுப்பு, வண்ணப்படம், கிராபிக்ஸ் என ரசிகர்களிற்கு விருந்து அளித்தபடியே வளர்ந்து வருகிறது நமது தமிழ் சினிமா.

இன்றைய காலகட்டத்தில் ரசிகனின் மனநிலை வெகுவாக மாறிவிட்டது. நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அதை ரசிக்கும் கூட்டம் பெருகிவிட்டது. எனவே எல்லாரையும் திருப்திபடுத்துற மாதிரி படம் எடுக்கின்றது மிகவும் கடினமான ஒரு விடயமே!

tamil-cinema-concepts
இன்றைய சினிமாவில் பெண்களின் நிலை

இன்றைய சினிமாவில் பெண்களை பொழுதுபோக்கிற்கான காட்சிப்பொருளாக பார்க்கின்ற தன்மையை காண முடிகின்றது. சமூகத்திற்கு பயனுள்ள விடயங்களை கூற வேண்டிய சினிமா தமது நிலையிலிருந்து விலகி முழுக்க முழுக்க வியாபார நோக்கில் பெண்களை பயன்படுத்துகின்றது. திரைப்படங்களில் பெண்களை மிகவும் மோசமான நிலையில் சித்தரிப்பது வேதனைக்குரிய ஒரு விடயமே ஆகும். பெண்களிற்கு பெருமை சேர்கின்ற விதத்தில் ஒன்று இரண்டு படங்கள் வெளிவந்தாலும்  கேளிக்கைக்குள்ளாகின்ற திரைப்படங்களே அதிகம். சின்னத்திரையை எடுத்துக்கொண்டோமானால் பெண்களை குடும்பத்தின் வில்லிகளாக சித்தரித்து அவர்களாலேயே உலகில் உள்ள குழப்பங்கள் எல்லாம் வருவதாகவும் எடுக்கப்படும் நெடுந்தொடர்களே பெரும்பான்மையானவை. மனித குலத்தின் அடிப்படை பெண் என கூறிய காலம் மாறி மனித அழிவுக்கு காரணம் பெண் என்ற நிலையை இந்த சினிமா உருவாக்கியுள்ளது. பெண்களுக்கு எதிரான எல்லா செயற்பாடுகளுக்கும் ஆண்கள் மட்டும் காரணம் என்று கூறமுடியாது.ஒரு வகையில் பெண்களும் இதற்கு துணை புரிகின்றனர். முதலில் பெண்கள் இதனை உணர்ந்து இப்படியான செயல்களுக்கு பங்களிக்காமல் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

இன்றைய நாட்களில் மதுவருந்தும் காட்சி இல்லாத திரைப்படத்தைக் காண்பது மிகவும் அரிதான விடயமே. பெரும்பான்மைத் திரைப்படங்களில் இளைஞர்கள் குடிப்பதும், புகைப்பதும் தான் நாகரிகம் என்றவாறு காட்சிப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு காட்டி  எந்தவித கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் இருக்கும்  ஒருவனுக்கு இவ்வாறான செயல்களில் ஈடுபடும் உணர்வை உருவாக்கும் செயலைப் பெரும்பாலான திரைப்படங்கள் தவறாமல் செய்து வருகின்றன.   அதுபோன்ற காட்சிகளில் மதுவருந்துவது உடல்நலத்துக்குக் கேடு என்று ஒரு  மூலையில் சிறிதாக போடுவார்கள். இவ்வாறான காட்சிகளை எடுத்துவிட்டு இப்படி சிறிதாக எச்சரிக்கை செய்து ஒரு பயனும் இல்லை. அரிதிலும் அரிதாய் ஒருசில நல்ல திரைப்படங்கள் வந்து ஆறுதல் தருகின்றன.

tamilgirl
நடிப்புத் துறையில் நடைபெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள், கோடிகளில் பணம் புரண்டும் நிம்மதியற்ற வாழ்க்கை,  தற்கொலைகள், அதிகமான விவாகரத்துகள், ஆபாசங்கள், மணிதனை மிருகமாக்கும் குரூர சிந்தனை கொண்ட வசனங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்கள்,  ஏகத்துவத்துக்கே வேட்டு வைக்கும் பாடல் வரிகள், தீவிரவாத செயல்களுக்கு வழிவகுக்கும் சண்டைக் காட்சிகள்,  சினிமாவைப் பார்த்து கொலை செய்தேன் என்று கூறும் வாலிபர்கள்..  அப்பப்பா பட்டியல் நீள்கிறது!   இதுதான் இன்றைய சினிமாவின் எதார்த்த நிலை என்பதை யாராலும் மறுக்க முடியாது. நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்  அவரவர் மன நிலையை சூழ்நிலையை பொறுத்ததே சினிமா மட்டும் தான் காரணம் என்று எடுத்துக் கொள்ளமுடியாது. நெல்லோடு புல்லும் வளரத் தான் செய்கிறது.  அதை பிடுங்கி எறிவது இல்லையா? அது போலவும் அன்னம் போல  பாலையும் தண்ணீரையும் பகுத்து எடுப்பது போல நாமும் பகுத்து எடுப்போம் நல்லவற்றை மட்டும். தீயதும் நல்லதும்  இனங் காண உதவுவதோடு, உலகம் முழுவதையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தா விட்டால் கிணற்று தவளையாக இருந்திருப்போம்.  சினிமா கெட்டவர்களையும் திருந்த சந்தர்ப்பம் கொடுக்கிறது. தீய காட்சிகள் ஏற்படுத்தும் விளைவுகளும் வேதனையும் கண்டு திருந்த வாய்ப்புண்டு என்றே எண்ணுகிறேன். ciniema-direction
சரித்திரம், புவியியல், விஞ்ஞானம்  மட்டு மல்லாமல் பாரம் பரியங்கள் பக்தி ஊட்டும் நல்ல திரைப் படங்களும் உள்ளன. சரஸ்வதி சபதம், திருவிளையாடல், தெய்வம் இப்படி எத்தனையோ, சகோதர பாசம் கொண்ட பாச மலர், ராஜபார்ட்ரங்கதுரை, தங்கைகோர் கீதம், போன்றவை மட்டுமல்லாமல் வறுமை, கொடுமை யினையும் எடுத்துரைக்கிறது. பல திரைபடம்  தலைப்பிலேயே நல்ல கருத்தை சொல்லும். நல்லறிவு பாடல்கள் புத்திமதி புகட்டும். காட்சிகள் கண் முன்னே நிறுத்தும் தத்ரூபமாக. குழந்தை தொழிலாளி, சாதி கலவரம், பசி தெரியாத பணக்காரன் பசியுணரவும், ஏழ்மையின் மன நிலையையும் எடுத்துரைக்கும், சீதனக்கொடுமை, பெண் உரிமை, பெண் அடிமை பற்றியும், மாமியார் மருமகள் கொடுமை, சித்திக் கொடுமை இவை பற்றி  புரிய வைக்கும்,  விழிப்புணர்வை ஏற்படுத்தும். அதே போல் நாம் செய்யக் கூடாது இது தவறு என்றும் தோன்ற வைக்கும். சினிமா பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அது மட்டும் அல்லாது லட்சக்கணக்கான குடும்பங்களை வாழ வைக்கிறது. இப்பொழுது காலத்திற் கேற்ப திரைப்படம் மாறி இருந்தாலும் பணம் பண்ணுவதே நோக்கமாக இருந்தாலும் பெயர் புகழுக்காக ஈடுபட்டாலும் தன் கடமையை சரியாக தான் செய்கிறது. M.G.R, சிவாஜி, ரஜனி, கமல், விஜய், சூரியா இவர்கள் எல்லாம் நடிப்புத் திறனுக்காக மட்டு மல்லாது நல்ல நல்ல கருத்துகளை முன் வைத்து நடித்தமையாலேயே இன்னமும் நிலைத்து நிற்கிறார்கள். அதுவே சினிமாவின் வெற்றியை பறை சாற்றுகிறது. நகைச் சுவைகள் கூட அறிவு புகட்டும் வகையில் எத்தனையோ சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. tamil-cinema-actors
எந்தத் திரைப்படமாக இருந்தாலும் நல்ல ஆழமான  கருத்தை முன் வைக்க  வேண்டும் அதில் கற்றுக்கொள்ள நிறைய இருக்க வேண்டும், அதாவது நியாயம், நீதி, நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு, தமிழ், தமிழ் கலாச்சாரம் அனைத்தையும்  கற்றுக் கொடுக்க வேண்டும். இனி வளரும் சமுதாயம் வளமாக வாழ திரைப்படம் காரணமாக இருந்தால் அதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும். நாமும் சமூகமும் சொல்வதை விடவும் ரஜனி, கமல் போன்ற நடிகர்கள் சொல்லுகின்ற விடயங்களை எந்த யோசனையும் இன்றி உடனேயே ஏற்றக் கொள்ளும் சமூகம் இது. சும்மாவா சொன்னார்கள், “சும்மா மாடு சொன்னால் கேட்காது மணி கட்டின மாடு சொன்னால் தான் கேட்கும் ” என்று,  ஆடுற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் பாடுற மாட்டை பாடித் தான் கறக்க வேண்டும்.
Leave your comment
Comment
Name
Email