நவீன காலகட்டத்தில் வணிகத்தில் சந்தைப்படுத்தல் மூலோபாயங்களின் ஒரு முக்கிய அங்கமாக திகழ்வது காணொளி உருவாக்குதலும் ஒருங்கிணைத்தலும் (Video Making and Editing) எனலாம். இது 2017 களில் மொத்த இணைய போக்குவரத்தில் 74% இடத்தினை வகிக்கிறது என எதிர்பார்க்கப்பட்டது. தற்பொழுது முன்பிலும் பார்க்க இது பன் மடங்கு அதிகரித்திருபதை இணையதள காணொளி விளம்பரங்கள் (Video Advertisements) மூலம் காணக்கூடியதாக உள்ளது. இன்றளவுளும் நீங்கள் Video Marketing பாவனையாளர் அல்ல எனின் உங்கள் 50% இற்க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இழக்கின்றீர்கள் என்பதே உண்மை. நீங்கள் பயன்படுத்தும் காணொளி மிகப்பெரிய காணொளியாக இருக்கவேண்டிய அவசியமில்லை, சில சமயம் அதுவே சவாலாகவும் அமைகிறது. அதன் உள்ளடக்கங்களை எவ்வாறு அமைத்துக் கொள்வதன் மூலம் வாடிக்கையாளர்களை கவர முடியும் என்பதற்கான இலகுவான வழிகள் இதோ,
1. விமர்சனங்கள் மற்றும் சான்றுகளின் தொகுப்பு
நம் தயாரிப்புகள் அங்கீகாரம் பெற்றவை என்பதனைக் குறித்துக் காட்டும் ஆதாரங்களாக மக்களின் விமர்சனங்கள் மற்றும் சாதனைகள் மூலம் பெற்ற விருதுகள் என்பவை திகழ்கின்றன. இவை மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்குகின்றது. மேலும் உங்களால் வழங்கப்படும் சேவையானது அவர்களுடன் சரியாக சென்றடைந்துள்ளதா என சுய மதீப்பீடு செய்து கொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் அமையும். இவை பொதுவாக உங்களைப் பற்றிய மக்கள் கருத்துக்களின் தொகுப்பு எனலாம்.
2. நீங்கள் யார் என்பதை உணர்த்துங்கள்.
உங்களின் தயாரிப்புகள் அல்லது சேவை மக்களிடம் செல்வதற்கு நீங்கள் யார் என்பதயும் உங்கள் நிபுணத்துவத்தினால் உங்களால் உருவாக்கப்படும் பொருள் அல்லது வழங்கப்படும் சேவை பற்றிய உங்கள் நிஜ குறிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் தெரிவியுங்கள். முன்பே வேறு நபர்களால் தயாரிக்கப்பட்ட படைப்புகளை பயன்படுத்தும் போது அது உங்கள் மீதான நம்பிக்கையின் மீது சந்தேகத்தினை ஏற்படுத்தும்.
3. உங்கள் தயாரிப்புகளின் உருவாக்கம்.
உங்கள் தயாரிப்புகள் யாரால் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்பதற்கான விளக்கம் வாடிக்கையாளைகளிடம் அதீத நம்பிக்கையை ஏற்படுத்தும். அதில் பயன்படுத்தப்படும் தொழிநுட்பங்களின் தனித்துவத்தன்மை உங்கள் தயாரிப்புகள் சிறந்த தரத்தில் இருப்பதை உறுதிப்படுத்தும்.
4. புகைப்படங்களின் தொகுப்பு.
கானொளிகளை பயன்படுத்தும் முன்பாக பயன்படுத்தபட்ட அதே காட்சி படங்களினை தொகுப்பாக்கி பயன்படுத்துவது உங்களின் பாரம்பரியத்தன்மையை வெளிபடுத்துவது மட்டுமல்லாது விரைவாகவும் சிக்கனமாகவும் காட்சிகளை உருவாக உதவுகின்றது. குறித்த ஒரு காட்சியினை மட்டும் பயன்படுத்துவதை காட்டிலும் பல காட்சிகளை ஒன்றிணைத்து காணொளியாக பயன்படுத்துவது வினைத்திறனானதாகும்.
5. உங்கள் உற்பத்தியாளர்களின் அறிமுகம்
பெரும்பாலும் உற்பதிதியானது யாரால் உற்பத்தி செய்யப்படுகின்றது என்பது வாடிக்கையாளர்களினை கவர்வதில் முக்கியமானதாகும். குறிப்பாக உணவு உற்பத்திகளில் அதனை உற்பத்தி செய்பவர்களை காண்பிப்பது அது சுகாதாரமானது என்பதனை உறுதி செய்கிறது. மேலும் நிறுவனகள் சார்ந்த சேவை வழங்குனர்கள் அவர்கனின் அணியினரரின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதான சிறு விளக்க காணொளிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
6. முக்கிய பிரபலங்களின் சான்று
பிரபலங்கள் நமது சேவை அல்லது உற்பத்தி நம்பகமானது மற்றும் சிறப்பானது என தெரிவிக்கும் போது பொது மக்களால் வழங்கப்படும் சேவை மற்றும் உற்பத்தியானது மீதான அபிப்பிராயாம் அப் பிரபலங்கள் மீதான ஈர்ப்பினால் மேலும் அதிகரிக்கும். வாடிக்கையாளர்கள் பலரது எண்ணங்களை திருப்தி செய்ய நன்கு பரீட்சயமான முகங்களாக பிரபலங்கள் திகல்வதே காரணமாகும்.
7. பயனர்களுக்கான விளக்க குறிப்புகள்
புதிய படைப்புகள் சந்தைப்படுத்தப்படும் போது அது பற்றிய விளக்கங்களை பயனரிடம் எடுத்துச்செல்ல மிக முக்கியமான வழியாக Video Marketing திகழ்கிறது. குறிப்பகாக இலத்திரனியல் உபகரங்கலின் பாவனை மற்றும் அதன் சிறப்பான உபயோகங்களை பட்டியல்படுத்துவது வாடிக்கியாலகளின் தேவைகளை ஒப்பிட்டுக்கொள்ள வாய்ப்பாக அமையும். படிப்படியான விளக்கம் பயனர்கள் உங்கள் உற்பத்தியின் பயன்பாட்டினை புரிந்துகொள்ள எதுவாக அமையும்.
8. கட்டுரைகளை காணொளிகளாக மீள் வடிவம் செய்தல்
உங்கள் பிரத்தியேக பக்கங்களின் வெளியிடப்படும் கட்டுரைகள் மக்களிடம் சென்றைடைய தலைப்புகளை காட்சிப்படங்களாகவோ அல்லது வசனங்களாகவோ வெளியிடுவதை விட அதனை விபரிக்கும் காணொளிகளாக வெளியிடுவது பயனர்களின் ஆர்வத்தை தூண்டுவதாய் அமையும். இது உங்கள் உற்பத்தியின் பற்றி அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது.
உங்கள் சிறு வனிகத்திற்கான காணொளிகளை உருவாக்குதல் மற்றும் பட்டியல் படுத்துவதற்குமான (Listing) சேவைகளை வழங்குவதில் Uplist நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது.
உங்கள் கருத்துகள் மற்றும் சந்தேகங்களை Comment Box இல் பதிவிடுங்கள்.