காதலிக்கிறவங்க ஏன்டா காதலில சிக்கினன் என்றும் காதலிக்காதவங்க அய்யோ எனக்கு காதலிக்க குடுத்து வைக்கல என்றும் வாழ்க்கையில ஒருதடவையாவது feel பண்ணியிருப்பீங்க இல்லையா? காதல் என்பது ரஜினி சொன்னதை போல தான் “அதுஎப்போ வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது,ஆனால் வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பா வரும்”காதலித்து திருமணம் செய்யவேண்டும்,காதலில் ஜெயிக்க வேண்டும் என்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டவர்கள் அதிகம்.ஆதாம் ஏவாள் காலத்தில் உருவான காதல், கடைசி மனிதன் இருக்கும்வரை அழியப் போவதில்லை என்பது நிதர்சனம்.
காதலில் விழுவது என்பது மனித இயல்பு. கொடுங்கற்களால் ஆன கர்வ கோட்டைகளை அன்பினால் உடைத்தெறியும் ஆயுதம் தான் காதல்,சொல்ல முடியாத ஓர் விசித்திர உணர்வு இதற்கு உருவம் இல்லை,உணர்வே உள்ளது.காதல்வசப்படும் போது ஏன் குறிப்பிட்ட ஒருவரை பிடிக்கறது? மற்றவரை பிடிக்கவில்லை? ஏனெனில் இயற்கை நம்மை ஒருவகையான நபருக்குமட்டுமே தயார் செய்து வைத்திருக்கிறது ,உங்கள் ஒவ்வொருவர் மனத்தின் ஆழத்தில் ஒரு பிரத்தியேக நாயகன் அல்லது நாயகி இருக்கிறார். அவரின் தனிப்பட்ட காதல் வரைபடம் உங்கள் ஆரம்ப இளமைக் காலத்தில் மனதில் உருவாகி ஆள் மனதில் பதிந்து இருக்கும். அந்த தனிப்பட்ட உருவமுடைய முகத்தைச் சந்திக்கும்போது ஒரு கை சொடக்கில் காதல் உங்களை ஆக்கிரமிக்கிறது.
காதல் மலரும் போது ஏற்படும் சில அறிகுறிகள் . 1.படப்படப்பு . 2.உள்ளங்கை வியர்த்தல். 3.மனம் கவர்ந்தவரை நினைக்கும் போது அதிக அளவில் சந்தோஷம். 4.மிதப்பது போல் உணர்வு. 5.ஒட்டுமொத்தமாக உலகமே உங்கள் காதலி/காதலனாக மாறிவிட்டதுபோன்ற பிரம்மை.உண்மை காதல் ஒருமுறை தான் மலரும் என்பது முட்டாள்தனமானது.உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹானுக்கு மும்தாஜ் முதல் காதலி அல்ல .அப்படியெனில் ஷாஜகானுக்கு மும்தாஜிடம் ஏற்பட்ட காதல் உண்மையானது இல்லையா ?சந்தர்ப்ப சுழ்நிலைகளாலும் கருத்து வேற்றுமையினாலும் காதல் உறவுகள் முறிந்து போவதுண்டு.இங்கு நாம் சரியான நபருடன் காதல் உறவில் பயணிக்கிறோமா என்பது தான் கேள்வி.நீங்கள் தெரிவு செய்து பயணித்துக் கொண்டிருக்கும் காதல்துணை சரியானவர் தானா என முதலில் தெரிந்து கொள்ளுங்கள் .எவ்வாறு இதனை தெரிந்து கொள்ளலாம்??
1. தனிமையாக உணர்தல்
உங்கள் துணை இருந்தும் கூட துன்பமாக இருக்கும் போது நீங்கள் தனிமையாக இருப்பது போன்ற உணர்வு எழுகிறது எனில், நீங்கள் காதலிக்கும் நபர் முழுவதுமாக உங்கள் துன்பத்தில் பங்கு எடுக்கவில்லை என்று அர்த்தம்.
2. பிரிவை ஏற்கும் துணிவு
பிரிவு ஏற்பட்டாலும் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்கிறது எனில், நீங்கள் சரியான நபருடன் காதல் உறவில் இல்லை என்று தான் பொருள்.
3. மூர்க்கத்தனமாக கோபம்காதல் உறவில் அடிக்கடி சண்டை வருவது இயல்பு தான். ஆனால், அவர் என்ன செய்தாலும் உங்களுக்குமூர்க்கத்தனமாக கோபம் வருகிறது எனில், நீங்கள் பயணிக்கும் காதல் உறவு பயனற்றது.
4. செயல்களை பகிர்ந்துக்கொள்ள மறுத்தல்
உங்கள் வாழ்வில் நடக்கும் அன்றாட செயல்களை கூட பகிர்ந்துக்கொள்ள நீங்கள் தயங்குவது. நீங்கள்தவறான நபருடன் உறவில் இருக்கிறீர்கள் என்று எடுத்துரைக்கும் முக்கிய அறிகுறி ஆகும்.
5. உணர்வற்ற பிரிவுகாதல் உறவில் பிரிவு ஏற்படும் உங்கள் மன உணர்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனில், உங்கள்துணையின் பிரிவு உங்களை மனதளவில் பாதிக்கவில்லை எனவே நீங்கள் தவறான நபருடன் காதல் என்றபெயரில் வெறுமென இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இவர் நமக்கு ஏற்ற ஆள் இல்லை என்பது போன்ற உணர்வு ஏற்படும் போது சிலர் இதை சகித்துக் கொண்டு உறவை நகர்த்த முயற்சிக்கின்றனர்.எத்தனை நாட்கள் சகித்து சகித்து வாழ முடியும்?நீங்கள் சகித்துக் கொள்ளும் ஒவ்வொரு நொடியும், பெரிய எரிமலையாய் பின்னர் உருமாறி உங்கள் வாழ்க்கையை நரகமாக்கி விடும்.
காதல் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி அதுவே வாழ்க்கை இல்லை.வாழ்க்கையின் ஒரு பகுதிக்காக வாழ்க்கையை தொலைப்பது முட்டாள்தனம்.காதலினால் இலட்சியத்தை மறந்துவிடாதீர்கள்.அது உங்கள் லட்சிய வேர்களை அரிக்காமல் பார்த்துக்கொள்ள. வேண்டும். காதல் மூலம் அடுத்தவரிடமிருந்து எதையாவது உறிஞ்சி எடுக்க முடியுமா என்று பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கணமே காதல் செத்துவிடும். அன்பு மட்டும் தீவிரமாக மலர்ந்திருந்தால், வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் விழுந்தாலும் காயப்படாமல் சுகமாக மிதந்து பயணம் செய்ய முடியும்.
“காலம்,நேரம் இவற்றை போல காதலையும் கடந்து செல்வீர்களாக! ” 1.எப்படிக் காதலிப்பது? 2.எதிர்ப்புகளை எப்படி சமாளிப்பது? 3.காதல் காலங்களில் எப்படி நடந்துகொள்வது ? 4.காதல் திருமணத்தில் முடிய என்ன செய்ய வேண்டும்? 5.காதல் தோல்வி ஏன் ஏற்படுகிறது? 6.காலம் முழுவதும் காதலுடன் வாழ என்ன வழி? என அடுக்கடுக்காக உங்கள் மனத்தில் கேள்விகள் எழக்கூடும்.இதற்கான பதில்கள் வேண்டுமா நண்பர்களே?