LAN (Local Area Network) என்பது கம்பி மூலம் இணைக்கப்பட்ட உள்ளக வலயமைப்பு ஆகும்.இதே போல் கம்பியில்லாத உள்ளக வலையமைப்பு WLAN (Wireless Local Area Network) எனப்படுகிறது.இந்த Wi-Fi எனும் வார்த்தை ஆனது Wireless, Fidelity எனும் இரு வார்த்தைகள் சேர்ந்து உருவாக்கியது.கணினி சார்ந்த உபகரணங்களிடையிலான வலையமைப்பில் கம்பியில்லாத தொடர்பாடலை குறிக்கும் ஒரு சொல் தான் Wi-Fi . இவ் இணைப்பில் வலையமைப்பிற்கு கம்பிகளுக்கு பதிலாக ரேடியோ அலைகளே டேட்டாவை (Data) அனுப்ப, பெற பயன்படுத்தப்படுகிறது. அதி வேக இணைய இணைப்பைப் பெறுவதற்கு கம்பியில்லாத Router பயன்படுத்தினால் நீங்களும் பயனாளிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதன் பயன்பாட்டிற்கு 2.4GHz அலைவரிசை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த Wireless Network இல் வனொலி, தொலைக் காட்சி போல் இல்லாமல் இரு வழித் தொடர்பாடல் இடம்பெறுகின்றது. இது Full-Duplex என அழைக்கப்படும். 1998 ஆம் அண்டில் இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று வரை இவ் தொழில்நுட்பம் பல வளர்ச்சிப் படிகளைத் தாண்டி வந்த வண்ணம் உள்ளது. தற்போதைய WiFi தொழில் நுட்பத்தில் 600 அடிகள் அல்லது அதனையும் தாண்டி WiFi, Data கம்பி இல்லாமல் பயணிக்கிறது.
WiFi வலையமைப்பின் பிரதான பயனாகக் வயரில்லாமல் எங்கிருந்தும் இணையத்தை அணுகக் கூடிய வசதியே கருதப்படுகிறது. தற்போதைய காலத்தில் கையடக்கத் தொலைபேசி, மடிக்கணினி போன்ற இடத்துக்கிடம் எடுத்துச் செல்ல கூடிய பல இலத்திரனியல் சாதனங்கள் WiFi வசதியுடன் வெளிவிடப்படுகின்றன. இந்த வசதியின் மூலம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் எங்கிருந்தும் வயரில்லாமலேயே இணையத்தை பார்வையிட முடியும்.
ஒரு WiFi Router உடன் இணைப்பை ஏற்படுத்த வேண்டுமானால் ஒரு கணினியில் WiFi சிக்னலை அனுப்ப மற்றும் பெறக்கூடிய WiFi Adapter (Wireless Adapter) எனும் சாதனம் பொருத்தப்படல் வேண்டும். தற்போது வெளிவரும் மடிக் கணினிகள் WiFi Adapter Card உடன் தயாரிக்கப்படுகின்றன. உங்கள் கணினியில் WiFi வசதி இல்லையெனில் U.S.P port இல் பொருத்தக் கூடிய WiFi Adapter ஐ வாங்கிப் பொருத்தலாம்.
கணினியிலுள்ள wireless adapter ஆனது data வை ரேடியோ சிக்னலாக மாற்றி எண்டெனா மூலம் அனுப்புகிறது. இந்த சிக்னலைப் பெற்றுக் கொள்ளும் wireless router ஆனது அதை decode செய்து மறுபடியும் இணையத்துடன் வயர் மூலம் தொடர்பு கொள்கிறது. இதே செயற்பாடு மறுதலையாகவும் நடை பெறுகிறது. அதாவது இணையத்திலிருந்து பெறும் தகவலை router ஆனது ரேடியோ சிக்னலாக மாற்றி கணினியிலுள்ள wireless adapter ஐ நோக்கி அனுப்புகிறது.
இது அதிக வேகமாகவும். அதிக தூரம்செல்லத்தக்கதாகவும். உருவாக்கப்பட்டுள்ளது. கம்பியில்லா வலையமைப்பை இப்போது பலரும் பரவலாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். வீடுகளில் மட்டுமன்றி நூல் நிலையங்கள், பல்கலைக் கழகங்கள், விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் போன்ற பல இடங்களில் இந்த கம்பியில்லாத் தொழில் நுட்பம் பயன் படுத்தப் படுகிறது.
WiFi தொழில் நுட்பத்தின் மூலம் மூலம் இலகுவாக இணையத்தில் இணையும் வசதி கிடைத்தாலும் உரிய பாதுகாப்பு இல்லையெனின் அதன் அருகாமையில் உள்ள எவரும் இந்த வலையமைப்பில் இணைந்து கொள்ளலாம் என்பதை ஒரு பாதகமான விடயமாகக் கருதலாம். WiFi தொழில் நுட்பமானது தொடர்பாடலில் பெரிய அளவிலான பங்கை வகிக்க ஆரம்பித்துள்ளதுடன் உலகெங்கும் உள்ளக கணினி வலையமைப்புகளில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.