தனி மனிதனின் பசி, கல்வி, தூக்கம் என்பன மனதோடு பின்னிப் பிணைந்தவை. அதனைக் கட்டுப் படுத்தும் பூட்டாகாக நம் வாழ்க்கை திகழ்கிறது நம் நல்ல எண்ணங்களே அதன் திறவுகோல். அதனால் தான் பலரால் நகரும் அவசர வாழ்க்கையில் நம் அன்றாட வேளைகளில் சீராக செய்ய இயலாமல் தளும்பல் நிலை காணப்படுகிறது. எனவே மனதை கட்டுக் கோப்பில் வைத்து வாழ்வை வளம் செய்ய தியானம் சிறந்த மருந்தாகும். இது பண்டைக்காலத்தை சென்ர்ந்ததாய் இருந்தும் இன்றுவரை விஞ்ஞானிகள் அதிலிருக்கும் நன்மைகளைக் கண்டறிவதில் ஆச்சரியமில்லை. தியானத்தின் வழி செல்லும் போது சில காலத்திலேயே நம் மனம் ஒரு சாந்தியடைந்த நிலையை உணர்வதை அறியலாம்.
அமைதியான சூழலே சிறந்த தேர்வு
தியானமானது ஓர் அமைதியான இடத்திலே செய்யப்பட வேண்டும். வெளியிலிருந்து வரும் கவனச் சிதறல்கள், வெளித்தூண்டல்களைத் தவிர்த்து குறித்த தியானத்தில் ஒன்றித்திருக்க அது மிகவும் உதவியாக இருக்கும். நம் சூழலே அது எவ்வளவு நேரம் நம் தியானம் நீடித்திருக்கும் என்பதையும் தீர்மானிக்கிறது. நாம் தியானம் செய்யும் இடமானது மிகவும் பெரியதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, மாறாக நம் தியானம் தியானம் இடையூறு செய்யப்படா வண்ணம் அமந்திருக்கப் போதுமானதாக இருந்தாலே போதும். சப்தங்களே பெரும்பாலும் இடையூறுகளை ஏற்படுத்துகிறது எனவே தொலைகாட்சி, தொலைபேசி என்பவற்றை தவிர்ப்பதுடன் இசையைக் கேட்க விருப்பமுள்ளவர்கள் இயற்கை ஒலிகளான மழை ஒலி அல்லது மெல்லிய ஓசைகளைக் கேட்பது நல்லது.
வசதியான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்
தியானத்தின் முக்கிய குறிக்கோளே மனதை அமைதிப்படுத்திக் கொள்வதாகும் அவ்வாறிருக்க உடல் பற்றிய சிந்தனை எழுவதும் இடையூறாகும். உடலும் மனமும் ஒன்றோடொன்று கட்டுப்பட்டவை, அவ்வாறிருக்க மிகவும் இறுக்கமான உடைகள் நம் மனம் உடலை பற்றி சிந்திக்கச் செய்யும் எனவே மிக மெல்லிய தளர்வான ஆடைகளை அணிவது சிறந்தது. மேலும் சூழலின் தட்ப வெப்பங்களுகேற்ப ஆடைகளை அணிய வேண்டும். பாதணிகளை அகற்றி தியானத்தில் ஈடுபடுவது கால்களை இலகுவாக உணர வைப்பதுடன் பூமிக்கும் பாததிற்குமான தொடுகை கூட ஒருவித அமைதியைத் தரும்.
தியானம் செய்யும் நேர இடைவெளியைக் குறித்துக் கொள்ளுங்கள்
தியானம் செய்வதற்கு முன்பாக நாம் எவ்வளவு நேரம் தியானத்தில் ஈடுபடப் போகிறோம் என முடிவெடுக்க வேண்டும். அதிககாலம் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் ஒரே நாளில் இருதடவை 20 நிமிடங்கள் எனும் அளவிலும் புதிதாய் ஆரம்பிப்பவர்கள் 5 நிமிடங்கள் எனும் அளவில் ஆரம்பிக்கலாம். நம் அன்றாட உணவு வேளைகளை அடிப்படையாகக் கொண்டு தியானத்திலீடுபடும் போது அது அன்றாட வாழ்வின் ஓர் அம்சமாக மாறிவிடும். ஆரம்பத்தில் குறித்த நேரம் வரை தியானத்தில் ஈடுபட முடியாது போனாலும் தியானம் செய்ய முயற்சி செய்வதே அதனை ஆரம்பிப்பவர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமையும்.
அமர்வதற்கு வசதியான நிலையை தெரிவு செய்க
உடலை வருத்தி தியானத்தில் ஈடுபடக் கூடாது, எனவே உடலின் நிறை தாக்கும் வகையிலான அமர்வு நிலைகளைத் தவிர்த்து உடலை இலகுவாக உணரும்வகையில் தெரிவு செய்யப்பட வேண்டும். ஒவ்வொருவரது உடல் கட்டமைப்பிற்கேட்பவும் இருபதற்க்கான நிலைகளை வேறுபடலாம், சிலக்கு முள்ளந்தண்டு பிரச்னைகள் இருப்பதால் தியானத்திற்கு பொதுவாக கடைபிடிக்கப்படும் தாமரை நிலை எனப்படும் கால்களை மடித்து நேராக அமரும் நிலையில் அமர முடிவதில்லை அப்படியானவர்கள் சாய்வான ஓர் வாங்கில் அமர்ந்தும் தியானத்தில் ஈடுபடலாம். மிக முக்கியமாக தியானமானது உடலையும் மனதையும் இலகுவாக இருக்க வேண்டும் மாறாக பொருத்தமற்ற இருக்கை நிலைகள் உடலில் வலியை ஏற்படுதுவணவாய் அமையக் கூடாது.
கண்களை மூடு
தியானத்தினை கண்கள் திறந்த நிலையிலோ அல்லது மூடிய நிலையிலோ செய்ய முடியும், இருந்தும் தியானம் செய்ய ஆரம்பிபவர்கள் கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பிப்பது மிகப் பொருத்தமானதாக இருக்கும். இது காட்சிகளால் ஏற்படும் கவனச் சிதறல்களைத் தவிர்த்து தியானத்தில் மனதை ஒருநிலைப்படுத்த உதவியாக இருக்கும். காலப் போக்கில் மனம் வலிமைப்பட்ட பின்னர் கண்களை திறந்த நிலையிலும் தியானம் செய்யும் வகையில் பக்குவம் ஏற்படும். இயற்கை காட்சிகளை ரசிப்பதன் மூலம் கண்கள் திறந்த நிலையில் மனம் ஒருமைப்பாட்டை ஏற்ப்படுத்தலாம் இருந்தும் தியானம் செய்ய ஆராம்பிப்பவர்கள் கண்களை மூடி பயிற்சியை ஆரம்பியுங்கள்.
பொறுமையே மனதின் எல்லை, மனதை ஓர் புள்ளியில் குவிக்க இவை உதவி செய்யும் எனும் நம்பிக்கையுடன்…